மாருதி எர்டிகாவை விட 3 லட்ச ரூபாய் குறைவான விலையில் இரண்டு 7 சீட்டர் கார்கள்! தரமட்டத்துக்கு இறங்கீட்டாங்க!

இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் கார்களில் (Most Affordable 7 Seater Cars) ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இதன் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 2,011 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 1,552 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 459 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 29.57 சதவீத வளர்ச்சி ஆகும்.

Renault Triber Side Design

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் வளர்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் ரெனால்ட் ட்ரைபர் கார் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,419 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த மார்ச் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2,011 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது இந்த வகையில் பார்த்தால் 408 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 16.87 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் வரும் மாதங்களில் ரெனால்ட் ட்ரைபர் கார் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது மிகவும் விலை குறைவான 7 சீட்டர் கார் ஆகும்.

Renault Triber

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.60 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.

மிகவும் விலை குறைவான காராக இருந்தாலும் கூட 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் கூல்டு க்ளவ் பாக்ஸ் போன்ற வசதிகள் (Features) எல்லாம் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 6 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), ரெனால்ட் ட்ரைபர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக உள்ளது.

ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நிஸான் க்ராவைட் (Nissan Gravite) 7 சீட்டர் கார், கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ரெனால்ட் ட்ரைபர் காரை விட குறைவாகும். அதாவது நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது நிஸான் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது, நிஸான் க்ராவைட் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11 ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரின் மாதாந்திர ரீதியிலான விற்பனை எண்ணிக்கை சரிவை சந்தித்திருப்பதற்கு நிஸான் க்ராவைட் காரின் வருகை ஒரு காரணமாக இருக்கலாம். ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய 2 நிறுவனங்களும் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற 7 சீட்டர் கார்களுக்கு எல்லாம் ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிஸான் க்ராவைட் ஆகிய இரண்டும் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும். மாருதி சுஸுகி எர்டிகாவின் ஆரம்ப விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது.

இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அதாவது மாருதி சுஸுகி எர்டிகா உடன் ஒப்பிடும்போது, ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிஸான் க்ராவைட் ஆகிய இரண்டு கார்களின் விலையும் 3 லட்ச ரூபாய்க்கு மேல் குறைவு ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 14, 2026, 13:32 [IST]
English summary
Renault triber sales report march 2026 30 per cent growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+