அந்த பெரிய குறை நீங்குகிறது... பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் வருகிறது ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் கார்!!

ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் காரில் இருந்த பெரிய குறை நீங்கப்போகிறது. அதாவது, அதிக சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் விரைவில் ரெனோ ட்ரைபர் கார் வர இருக்கிறது. ரெனோ ட்ரைபர் கார் 7 சீட்டர் மாடலாக இருந்தாலும், அதில் தற்போது வழங்கப்படும் பெட்ரோல் எஞ்சின் போதுமான பவரை வெளிப்படுத்துவதாக இல்லை என்ற குறை இருந்து வருகிறது.

இந்த காரில் 7 பேர் மற்றும் உடைமைகளுடன் முழு சுமையுடன் செல்லும்போது பல சமயங்களில் போதுமான சக்தி கிடைக்கவில்லை என்ற குறை இருக்கிறது. இந்த குறையை போக்கும் விதத்தில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் ரெனோ ட்ரைபர் கார் வரும் செப்டம்பர் இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Renault Triber

தற்போது வழங்கப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 72 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்கும் நிலையில், புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

Also Read

குறிப்பாக, ரெனோ ட்ரைபர் கார் முழு பாரத்துடன் ஓவர்டேக் செய்யும்போதும், ஏற்றமான மலைச்சாலைகளில் செல்வதற்கும் போதுமான பவர் இல்லை என்ற குறையை இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் நீக்கிவிடும். குறிப்பாக, 160 என்எம் டார்க திறனை வழங்க வல்லதாக இருப்பதால், இந்த குறை நிச்சயமாக நீங்கும் என தெரிகிறது.

தற்போது ரெனோ ட்ரைபர் கார் ரூ.5.81 லட்சம் முதல் ரூ.8.69 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஆனால், புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது ரூ.80,000 முதல் ரூ.90,000 வரையிலான கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Also Read

இது 7 சீட்டர் மாடலாக இருந்தாலும், மூன்றாவது வரிசையில் சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து செல்வதற்கு ஏதுவானதாக இருக்கும். அதாவது, ஒரு 5 பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும். இருப்பினும், நெரிசல் மிகுந்த இடங்களில் பயன்படுத்துவதற்கும், தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற அம்சங்களுடன் இந்த 7 சீட்டர் கார் வருகிறது.

ரெனோ ட்ரைபர் காரில் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்படுவதற்காக புதிய Renault Group Entry Platform (RGEP) என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்தி உள்ளனர். அதாவது, ஏற்கனவே இருந்த CMF-A கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் டர்போ பெட்ரோல் எஞ்சினை பொருத்துவதற்கு சவால்கள் இருந்தது. அதனை போக்கும் விதத்தில், இந்த புதிய கட்டமைப்பில் ரெனோ ட்ரைபர் டர்போ மாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் புதிய ரெனோ ட்ரைபர் கார் வர இருக்கிறது.

Article Published On: Monday, August 31, 2026, 9:36 [IST]
English summary
Renault triber to be launched with turbo petrol engine
மேலும்... #car price #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out