மிகவும் விலை மலிவான 7 சீட்டர் கார்.. பவர்ஃபுல்லான டர்போ பெட்ரோல் இன்ஜினோடையும் வாங்கலாம்!

கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வந்த டிரைபர் 7 சீட்டர் எம்பிவி மாடலை அப்டேட் செய்தது ரெனோ. இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான 7 சீட்டர் கார் மாடல் இது தான். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் புதிதாக கிராவைட் என்ற 7 சீட்டர் கார் மாடலை நிஸான் வெளியிட்டது. இந்த நிலையில், இந்த டிரைபர் எம்பிவி மாடலுக்கு பல்வேறு புதிய அம்சங்களை ரெனோ கொடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரைபர் எம்பிவிக்கு டர்போ பெட்ரோல் இன்ஜின்:

இந்த 7 சீட்டர் காரில் தற்போது 1.0 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினை மட்டுமே பயன்படுத்தி வருகிறது ரெனோ. 7 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய கார் என்னும் போது அதிக பவரும் தேவைப்படும். ஆனால் இப்போது வரை அந்த கூடுதல் பவரைத் தரக்கூடிய டர்போ பெட்ரோல் இன்ஜினை டிரைபருக்கு ரெனோ கொடுக்கவில்லை.

Renault Triber

மற்ற கார் மாடல்களில் எல்லாம் அந்த இன்ஜின் இருக்கிறது. ஆனால் டிரைபரில் இல்லை. கடந்தாண்டு ஃபேஸ்லிப்ட் அப்டேட் குறித்த பேச்சு அடிபடும் போதே, இந்த முறை டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் ரெனோ கொடுக்கவில்லை. இனி அவ்வளவு தான் என நினைத்துக் கொண்டிருக்கும் போது தற்போது விரைவிலேயே டர்போ பெட்ரோல் இன்ஜினை அந்நிறுவனம் கொடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

HR10 என்ற குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படும் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது, ரெனோ டிரைபர், நிஸான் மேக்னைட் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரெனோ டஸ்டரின் அடிப்படை வேரியன்ட்களில் கூட கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது டிரைபரில் பயன்பாட்டில் இருக்கும் BR10 நேச்சுரலி அஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் இன்ஜினானது 72 hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும் நிலையில், இந்த டர்போ பெட்ரோல் இன்ஜினானது 100 hp பவரை உற்பத்தி செய்கிறது.

Renault Triber

அதுமட்டுமின்றி 160 Nm டார்க்குடன், 7 பேர் அமர்ந்தாலும் சிரமமில்லாத இழுவைத் திறனையும் இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் டிரைபருக்குக் கொடுக்கும். மற்ற கார்களில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. டிரைபரிலும் அதே கியர்பாக்ஸ் தேர்வுகளே கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேக்டரி ஃபிட்டட் CNG கிட், டூயல் சிலிண்டர் மற்றும் டர்போ இன்ஜினுடன்:

இப்போது டிரைபருக்கு ரெனோ வழங்கவிருக்கும் இரண்டாவது அம்சத்திற்கு வருவோம். கடந்த ஆண்டு தான் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார் மாடல்களில் CNG அம்சத்தைக் கொடுக்கத் தொடங்கியது ரெனோ. ஆனால் ஃபேக்டரியில் இருந்த CNG கிட் பொறுத்தப்படாமல், டீலர்ஷிப்களில் மூன்றாம் தரப்பு நிறுவனம் மூலமே CNG கிட் பொருத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், ஃபேக்டரியில் இருந்த CNG கிட் பொருத்தப்பட்டு டிரைபரை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது ரெனோ. அதுமட்டுமின்றி இப்போது சிங்கிள் சிலிண்டர் CNG கிட்டே டிரைபரில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பூட் ஸ்பேஸ் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே CNG மாடல்களில் பூட் ஸ்பேஸையும் அதிகரிக்கும் வகையில் டூயல் சிலிண்டர் CNG கிட்டை டிரைபரில் கொடுக்கவுள்ளது ரெனோ.

ஒரேயொரு பெரிய சிலிண்டருக்குப் பதிலாக இரண்டு சிறிய சிலிண்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம், கணிசமான அளவு பூட் ஸ்பேஸை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடியும். இதனை டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய CNG கார்களில் கொடுத்திருக்கின்றன. தற்போது அதனை ரெனோவும் பின்பற்றவிருக்கிறது.

இவையனைத்திற்கும் மேலாக CNG எரிபொருளில் இயங்கும் டிரைபர் மாடலிலும் மேலே கூறிய டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை ரெனோ கொடுக்கவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் டாடா நெக்ஸான் iCNG மாடலில் மட்டுமே தற்போது டர்போ பெட்ரோல் + CNG காம்போ கொடுக்கப்பட்டு வருகிறது. டிரைபர் இந்த காம்போவுடன் வெளியாகும், போது இதனைக் கொண்டிருக்கும் இரண்டாவது காம்போவாக ரெனோ டிரைபரே இருக்கும்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த அப்டேட்கள் செய்யப்பட்ட டிரைபர் எம்பிவி மாடலை ரெனோ வெளியிடலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படியோ வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ரெனோவிடம் கேட்டு வந்த பல அப்டேட்கள் கைகூடவிருக்கின்றன. இந்தியாவில் இந்த 7 சீட்டர் எம்பிவி மாடலானது ரூ.5.76 லட்சம் முதல் ரூ.8.60 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விலை குறைவான 7 சீட்டர் கார் மாடலாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் குறைவான ஆப்ஷன்களைக் கொண்ட காராகவும் இது இருந்து வந்தது. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்களுடன், பிராக்டிகலான அம்சங்களைக் கொண்ட, பவர்ஃபுல்லான இன்ஜின் கொண்ட, அதிக மைலேஜ் கிடைகக்கூடிய கார் மாடல்களில் ஒன்றாக டிரைபர் மாறும்.

இது வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் விரும்பும் வகையிலான அம்சங்களுடன் கூடிய காரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் கொடுக்கும். இதன் மூலமாக டிரைபரின் விற்பனையும் அதிகரிக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. CNG கிட்டை மூன்றாம் தரப்பு நிறுவனத்திடமிருந்து, ஃபேக்டரி ஃபிட்டடாக மாற்றுவது சிறப்பான ஒரு மூவ். தற்போது தான் ரெனோ சரியான பாதையில் நகரத் தொடங்கியிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 16, 2026, 21:00 [IST]
English summary
Renault triber to soon get turbo petrol engine dual cylinder factory fitted cng kit and much more
மேலும்... #renault #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+