ரூ.7.84 லட்சத்தில் சக்திவாய்ந்த டர்போ எஞ்சினுடன் ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்!

இந்தியாவில் அதிக இருக்கைகள் கொண்ட குறைந்த விலை கார்களை தேடும் குடும்ப வாடிக்கையாளர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் ரெனோ ட்ரைபர் கார் தற்போது மிக முக்கிய அம்சத்தை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட புதிய ட்ரைபர் அதிகாரப்பூர்வமாக இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.7.84 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ரெனோ ட்ரைபர் காரில் இதுவரை 1.0 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏழு பேர் பயணம் செய்யும்போது, இந்த எஞ்சின் போதுமான சக்தியை வழங்குவதில் தடங்கல் இருந்து வந்தது. இது நகரப் பகுதி பயன்பாட்டிற்கு போதுமானதாக இருந்தாலும், 7 பயணிகள் முழுமையாக அமர்ந்து செல்லும்போதும், நெடுஞ்சாலைகளில் வேகமாக முந்திச் செல்ல முயலும்போதும், ஏற்றமான சாலைகள், மலைப்பாங்கான பகுதிகளில் செல்லும்போது போதுமான சக்தியை இது வழங்குவதில் பிரச்னை இருக்கிறது.

Renault Triber

இதனால், கூடுதல் பவரை வெளிப்படுத்தும் எஞ்சின் தேர்வு ரெனோ ட்ரைபர் காருக்கு அவசியமாக வாடிக்கையாளர்கள் கருதினர். இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் இந்த நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் ட்ரைபர் கார் வந்துள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

Also Read

புதிய ட்ரைபர் காரின் டர்போ மாடலில் மூன்று சிலிண்டர் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரெனோ கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் கார்களில் பயன்படுத்தப்படும் டர்போ எஞ்சின்தான் தற்போது ட்ரைபரிலும் வழங்கப்படுகிறது.

சாதாரண பெட்ரோல் எஞ்சினுடன் ஒப்பிடும்போது இந்த டர்போ எஞ்சின் வழங்கும் அதிக டார்க் மூலமாக நடைமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மலைப்பாதைகள், நெடுஞ்சாலை முந்திச் செல்லும் சூழல்கள் மற்றும் முழு பயணிகள் சுமையுடன் காரை இயக்கும்போது, குறைந்த வேகத்திலிருந்து அதிக வேகத்திற்கு செல்ல முற்படும்போது, இந்த டர்போ எஞ்சின் சிறப்பான செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் எரிபொருள் சிக்கனம் என்பதையும் குறிப்பிட வேண்டும். புதிய ட்ரைபர் காரின் டர்போ எஞ்சின் மாடலானது லிட்டருக்கு 21 கிமீ மைலேஜை வழங்கும் திறன் இருப்பதாக ரெனோ தரப்பு கூறுகிறது. அதிக செயல்திறன் கொண்ட எஞ்சின் என்றாலே மைலேஜ் குறையும் என்ற பொதுவான எண்ணத்திற்கு மாறாக, குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற எரிபொருள் சிக்கனத்தையும் இந்த 7 சீட்டர் காரில் தக்கவைக்க ரெனோ நிறுவனம் முயன்றுள்ளது.

Also Read

இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினுக்காக ட்ரைபர் கார் ரெனோ குழுமத்தின் RGEP எனப்படும் புதிய கட்டமைப்புத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக சஸ்பென்ஷன் அமைப்பில் மாற்றங்கள், புதிய ஆன்டி-ரோல் பார்கள், மேம்படுத்தப்பட்ட வெப்ப மேலாண்மை மற்றும் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும் பிரேக் சிஸ்டத்தின் செயல்திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதிக நிலைத்தன்மையுடன் கார் செல்வதற்கான பாதுகாப்பு தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, கூடுதல் பவர் மற்றும் டார்க் கிடைப்பதால் அதை கையாளும் வகையிலும் காரின் அடிப்படை இயக்கவியல் அமைப்புகளில் தேவையான மாற்றங்களை செய்துள்ளதாக ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ட்ரைபர் டர்போ மாடலானது மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. எவல்யூசன் வேரியண்ட் ரூ.7.84 லட்சத்திலும், டெக்னோ வேரியண்ட் ரூ.8.53 லட்சத்திலும், விலை உயர்ந்த எமோஷன் வேரியண்ட் ரூ.8.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போதைய தலைமுறை டிரைபர் எம்பிவி காரில் 5 முதல் 7 பேர் வரை அமரக்கூடிய வகையில் இருக்கை அமைப்பை மாற்றிக்கொள்ள முடியும். மூன்றாவது வரிசை இருக்கைகளை அகற்றும்போது அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் வசதியும் உள்ளது. இதனால் புதிய டர்போ எஞ்சின், ஏற்கனவே குடும்ப வாடிக்கையாளர்களை கவர்ந்த நடைமுறை பயன்பாட்டுக்கு கூடுதல் செயல்திறனை சேர்க்கிறது.

Article Published On: Monday, September 28, 2026, 12:02 [IST]
English summary
Renault triber turbo 7 seater car launched india price variants features specs mileage
மேலும்... #new launches #renault #renault triber
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out