மாருதி கார் மார்க்கெட்டிற்கு இதனால் எந்த பிரச்சனையும் இல்லையே! நீளம் 4மீ-க்கும் கம்மி-ன்னா விலை 10 லட்சத்தில்!
ரெனால்ட் (Renault) நிறுவனம் அறிவித்தப்படி அதன் 'பிரிட்ஜர் கான்செப்ட்' (Bridger Concept)-ஐ வெளியீடு செய்துள்ளது. இந்தியா உள்பட சர்வதேச சந்தைக்காக ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ள புதிய சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) காருக்கான கான்செப்ட் மாதிரியாக வெளியிடப்பட்டுள்ள இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த யொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் சமீப காலங்களில் வெகுவாக வளர்ச்சி கண்டுள்ளது. அதிலிலும் குறிப்பாக, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரை வாங்கவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர் என்பது அத்தகைய கார்களின் மாத விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிய வருகிறது.

உலகளவில் வெளியீடு செய்யப்பட்டாலும், பிரிட்ஜர் கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆனது முக்கியமாக இந்திய சந்தையை டார்க்கெட் செய்தே கொண்டுவரப்படுகிறது. மேலும், இந்தியாவை போன்று அளவில் சிறியதான எஸ்யூவி கார்கள் அதிகம் விற்பனையாகும் நாடுகளிலும் இந்த காரை களமிறக்க ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.
கான்செப்ட்டின் பிரிட்ஜர் பெயரில் இந்த புதிய எஸ்யூவி கார் வருகிற 2027ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்ஜர் கான்செப்ட்டை பொறுத்தவரையில், இது பெட்டகம் வடிவில் நிமிர்ந்த தோற்றத்தை கொண்டுள்ளது. இதற்கேற்ப வீல் ஆர்ச்கள் சதுர வடிவில் உள்ளன. மேலும், கான்செப்ட்டின் பக்கவாட்டில் ஷோல்டர் லைன்களும் தடிமனானதாக உள்ளன.

இத்தகைய தோற்றத்துடன் இந்த கான்செப்ட் மாதிரி நிமிர்ந்த தோற்றத்தில் உள்ளதால் இதனை பார்க்கும்போது வழக்கமான பாரம்பரியமிக்க எஸ்யூவி கார்கள் தான் நினைவிற்கு வருகின்றன. முன்பக்கத்தில் இந்த கான்செப்ட் வாகனம் மெல்லியதான விளக்குகளின் செட்-அப்பை கொண்டுள்ளது. இன்னும் சொல்லபோனால், 'RENAULT' என்கிற எழுத்துகள் கூட ஒளிர்கின்றன.
பிரிட்ஜர் கான்செப்ட்டிற்கு அடியில் அகலமான ஏர் டேம் வழங்கப்பட்டிருக்க, அதற்கும் கீழே சில்வர் நிறத்தில் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் பொனெட் நன்கு உயரமாக பொருத்தப்பட்டுள்ளதாலும், பின்பக்கத்தில் டெயில்கேட்டில் ஸ்பேர் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதாலும் இந்த கான்செப்ட் பார்ப்பதற்கு ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் போன்றதான தோற்றத்தை அளிக்கிறது.

முன்பக்கத்தை போல, இந்த கான்செப்ட்டின் பின்பக்கமும் எளிமையான தோற்றத்தில், நிமிர்ந்த டிசைனில் உள்ளது. பின்பக்கத்தில் டெயில்லைட்கள் வளைந்த டிசைனில் உள்ளன. பின்பக்க பம்பர் ஸ்போர்டியான தோற்றத்திலும், சில்வர் நிற கிளாடிங் உடனும் உள்ளது. உட்புறத்தில், பின் இருக்கை பயணிகள் கால்கள் வைக்கும் பகுதியில் 200மிமீ கொள்ளளவில் இடவசதியும், 400 லிட்டர்கள் கொள்ளளவில் பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான பூட் ஸ்பேஸ் பகுதியும் இடம்பெற்றுள்ளது.
தரையில் இருந்து இந்த கான்செட் மாதிரியின் அடிப்பகுதி ஆனது 200மிமீ உயரத்தில் அமைந்திருக்கும் நிலையில், இந்த கான்செப்ட்டில் 18 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய பிரிட்ஜர் கான்செப்ட்டை சிறிய கார்களை உருவாக்க பயன்படுத்தும் ஆர்-ஜிஎம்பி (R-GMP) பிளாட்ஃபாரத்தை பயன்படுத்தி ரெனால்ட் உருவாக்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் சிறியதான கார்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி சலுகைகளை பெறும் முயற்சியாக இத்தகைய பிரிட்ஜர் காரை ரெனால்ட் இந்தியாவிற்கு கொண்டுவருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமின்றி, எதிர்காலத்தில் இந்த பிரிட்ஜர் கான்செப்ட் ஆனது எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரீட் வெர்சன்களிலும் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









