இந்தியாவை மிரள விட சீனாவில் இருந்து வருது புதிய ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார்

சர்வதேச அளவில் சீன நிறுவனங்களே எலெக்ட்ரிக் வாகன விற்பனை சந்தையில் அதிகளவில் கோலோச்சி வருகின்றன. இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு இருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாகவே அதன் தாக்கம் குறைவாக இருக்கிறது. இருந்த போதிலும், BYD உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தியாவில் கணிசமான அளவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன.

நேரடியாக இல்லையென்றாலும், வேறு சில வழிகளில் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டு தான் இருக்கின்றன. மேலும், இந்திய தற்போது சில இந்திய நிறுவனங்களும் சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து அவற்றின் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகின்றன.

Rox Adamas Electric Car

இதனால் சீனாவைச் சேர்ந்த பல்வேறு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் புதிய கார்களை ஏதாவது ஒருவழியில் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன. அப்படி இந்தியாவிற்குள் கார்களை கொண்டு வருவதற்கு முன்பே தங்கள் கார்களின் டிசைன்களை இங்கே அந்நிறுவனங்கள் பதிவு செய்வதும் நடக்கிறது. அப்படியான புதிய முயற்சியாக சீனாவைச் சேர்ந்த ராக்ஸ் மோட்டார் (Rox Motor) என்ற நிறுவனம் புதிய பிளக் இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றின் டிசைனை இந்தியாவில் காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

முதன்மையாக சீனாவிலும், மற்ற நாடுகளில் வேகமாக எலெக்ட்ரிக் கார் விற்பனையை விரிவாக்கமும் செய்து வரும் ராக்ஸ் மோட்டார் நிறுவனம், தங்களது அடாமஸ் (Adamas) என்கிற எலெக்ட்ரிக் காரின் டிசைனையே இந்தியாவில் காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது. பார்த்தவுடன் லேண்டு ரோவர் டிஃபெண்டரின் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. டிஃபெண்டரைப் போலவே சொகுசு எஸ்யூவி மாடலாகவே இதனை வடிவமைத்திருக்கிறது ராக்ஸ் மோட்டார்ஸ். ஆனால், டிஃபெண்டர் ஒரு எரிபொருள் காராக இருக்கும் நிலையில், இந்த அடாமஸ் ஒரு பிளக் இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் காராக இருக்கிறது.

Rox Adamas Hybrid Electric car

இந்த அடாமஸ் காரின் முழுமையான இயக்கம் எலெக்ட்ரிக் மோட்டார்களை மையமாகக் கொண்டது. அப்படியென்றால் இந்தக் கார் முழுமையாக மின்சாரத்திலேயே இயங்கும். ஆனால், காரின் ரேஞ்சை உயர்த்துவதற்காக 1.5 லிட்டர், 4 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜினும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினின் வேலை கார் இயங்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வது மட்டுமே. இன்ஜின் எந்த வகையிலும் காரின் வீல்களுடன் இணைக்கப்படவில்லை. இந்த இன்ஜின் உற்பத்தி செய்யும் மின்சாரமானது எலெக்ட்ரிக் மோட்டார்களுக்குக் கடத்தப்பட்டு, அந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாகவே கார் இயங்கும்.

இந்த இன்ஜினுடன் 56.01 kWh பேட்டரி பேக்கும் இந்தக் காரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரி பேக் மற்றும் பெட்ரோல் டேங்க் எல்லாம் சேர்ந்து சுமார் 1226 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டுள்ளது இந்த ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார். முழுமையான எலெக்ட்ரிக் காராக பேட்டரியின் உதவியுடன் மட்டும் 235 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டுள்ளது. இதன் பவர்ட்ரெயினானது ஒட்டுமொத்தமாக 475 PS பவர் மற்றும் 740 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

5,298 மிமீ நீளம், 1,985 மிமீ அகலம், 1,856 மிமீ உயரம் மற்றும் 3,010 மிமீ நீள வீல்பேஸ் அளவுகளைக் கொண்டிருக்கிறது இந்த ராக்ஸ் அடாமஸ் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார். ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் டொயோட்டா ஃபார்ச்சூனரை விட அனைத்து வகையிலும் பெரிய கார் இந்த ராக்ஸ் அடாமஸ். கிரௌண்டு கிளியரன்ஸும் 272 மிமீ-ஐ கொண்டுள்ளது அடாமஸ். ஃபார்ச்சூனரில் 225 மிமீ தான்.

இந்தக் காரில் கவுச் 7 சீட்டர் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் 6 சீட்டர் என இரண்டு விதமான சீட்டிங் தேர்வுகளும், பல்வேறு மேம்பட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஹீட்டட் மற்றும் 4 வகைகளில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஸ்டீயரிங் வீல், ட்ரிபிள் ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், PM 2.5 ஏர் ஃபில்டர், 256 நிறங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், கீலெஸ் எண்ட்ரி, ஸ்மார்ட்போனில் வைத்துக் கொள்ளும் வகையில் டிஜிட்டல் கீ, 12 வகைகளில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய டிரைவர் சீட், 10 வகைகளில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான பயணிகள் இருக்கை ஆகிய மேம்பட்ட அம்சங்களை இந்தக் கார் கொண்டுள்ளது.

இந்தக் காரின் டிசைன் இந்தியாவில் காப்புரிமை செய்ப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ராக்ஸ் மோட்டார் நிறுவனம் ஏதாவது ஒரு வகையில் இதனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராக்ஸ் மோட்டார் நிறுவனம் இந்திாவில் இவ்வாறு காப்புரிமைக்குப் பதிவு செய்யும் முதல் கார் மாடல் இந்த அடாமஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காகக் கூட இதுபோன்று டிசைன்களை நிறுவனங்கள் காப்புரிமை செய்யும்.

தங்களுடைய வாகனங்களின் டிசைன் அல்லது அதில் இருக்கும் தனித்துவமான அம்சங்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு இவ்வாறு காப்புரிமை செய்யப்படுகிறது. அந்த வகையில் கூட ராக்ஸ் மோட்டார் நிறுவனம் அடாமஸ் காரின் டிசைனை இந்தியாவில் காப்புரிமை செய்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பிற்கு ரூ.59 லட்சம் என்ற விலையில் இந்தக் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடாமஸ் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார் இந்திாவிற்கு வருகிறதோ இல்லையோ, இந்திய சந்தையை நிறைய சீன நிறுவனங்கள் குறிவைத்திருக்கின்றன, அதில் ஒன்றாக ராக்ஸ் மோட்டாரும் இருப்பது தெரிகிறது. இப்போது இல்லையென்றாலும் மாறி வரும் வணிகச் சூழலில் சீன முதலீடுகளை இந்திய அரசு தடையில்லாமல் அனுமதிக்கும் போது இந்தக் காப்புரிமை அந்நிறுவனத்திற்குக் கைகொடுக்கும். ராக்ஸ் மோட்டார் இந்த அடாமஸ் ஹைபிரிட் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடுகிறா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 26, 2026, 17:15 [IST]
English summary
Rox adamas luxury hybrid electric suv chinese make design patented in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+