2027ல் அறிமுகமாகிறது ஹூண்டாய் நீரா 7 சீட்டர் எம்பிவி கார்... மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டி

அண்மையில் இந்தோனேஷியாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹூண்டாய் நீரா எம்பிவி கார் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் 2027-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியச் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ நிகழ்ச்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்திய அறிமுகம் குறித்து ஹூண்டாய் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜிஐஐஏஎஸ் (GIIAS) வாகனக் கண்காட்சியில், நீரா என்ற பெயரில் ஏழு இருக்கைகள் கொண்ட மின்சார வாகனத்தின் முன்மாதிரியை ஹூண்டாய் நிறுவனம் காட்சிப்படுத்தியது. அந்த மாடல் மின்சார வாகனமாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவுக்காக உருவாக்கப்படும் நீரா எம்பிவி கார் மாடலில் பெட்ரோல், டீசல், டர்போ பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படலாம் என கார்வாலே வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

2027 7 Hyundai Neira MPV India Launch 2027 Engines Features

குறிப்பாக, பெரிய ரக கார்களில் சிஎன்ஜி தேர்வை வழங்குவது ஹூண்டாய்க்கு முக்கியமானதாக இருக்கும். குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க விரும்பும் குடும்ப வாடிக்கையாளர்களையும், வணிகப் பயன்பாட்டிற்காக கார்களை வாங்குபவர்களையும் ஈர்க்கும் வகையில் இது அமையும். இருப்பினும், எஞ்சின் தேர்வுகள், கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Also Read

கியா கேரன்ஸ் கிளாவிஸ் பிளாட்ஃபார்ம்

இந்தோனேசியாவில் காட்சிப்படுத்தப்பட்ட நீரா முன்மாதிரி காரானது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் உள்ள கியா கேரன்ஸ் கிளாவிஸ் (Kia Carens Clavis) காரின் பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வடிவமைப்பு, வசதிகளில் மாற்றங்களுடன் வரும். முன்பக்கத்தில் ஹூண்டாய்க்கே உரிய தோற்றம், தனித்துவமான அலாய் வீல்கள் மற்றும் பின்புறத்தில் இணைக்கப்பட்ட டெயில் லேம்ப் அமைப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன. உட்புறத்தில் கிரெட்டா காரின் வசதிகள், டிசைன் அம்சங்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

Also Read

மாருதி எர்டிகாவுக்கு போட்டி

இந்தியாவில் அறிமுகமானால், ஹூண்டாய் நீரா கார் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), எக்ஸ்எல்6 (XL6), டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) மற்றும் பங்காளியான கியா கேரன்ஸ் வரிசை கார்களுக்கு போட்டியாக அமையலாம். ஏழு இருக்கைகள், குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற இடவசதி மற்றும் பல்வேறு எரிபொருள் தேர்வுகள் ஆகியவை இதன் முக்கிய பலமாக இருக்கலாம்.

அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய ஹூண்டாய் நீரா கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் அறிமுகம் செய்யப்படலாம். இது வாடிக்கையாளர்களுக்கு நிச்சயமாக சிறந்த மாற்றுத் தேர்வாக அமையும்.

Source: Carwale

Article Published On: Friday, October 16, 2026, 17:45 [IST]
English summary
Scoop hyundai neira mpv india launch 2027 ertiga carens rival
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out