செப்டம்பர் கார் விற்பனையில் செம திருப்பம்... மாருதி முதலிடம்! மஹிந்திரா, ஹூண்டாய், டாடா நிலவரம் என்ன?

இந்திய கார் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் வாகனப் பதிவு எண்ணிக்கை மிக நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக முன்னணி நிறுவனங்களில் மாருதி சுஸுகி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மஹிந்திரா, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவில் கார் பதிவு எண்ணிக்கையை பெற்றுள்ளன.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் வாகனப் பதிவுத் தரவுத்தளத்தில் (VAHAN) பதிவான சில்லறை விற்பனையில் கீழ் வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் செப்டம்பரில் வாகனப் பதிவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே நிறுவனங்கள் அறிவிக்கும் விற்பனை எண்ணிக்கையுடன் இந்த எண்ணிக்கையில் சில வேறுபாடு இருக்கலாம்.

Maruti Fronx

மாருதி சுஸுகி முதலிடம்

கடந்த மாதம் இந்தியாவில் அதிக அளவில் கார் மற்றும் பயணிகள் வாகனப் பதிவுகளை பெற்ற நிறுவனமாக மாருதி சுஸுகி முதலிடத்தில் உள்ளது. வாகனப் பதிவுத் தரவின்படி, செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பதிவுகள் 1,46,828 யூனிட்டுகளாக இருந்தன. ஆகஸ்ட் மாதத்தில் 1,46,050 பதிவுகள் இருந்த நிலையில், செப்டம்பரில் 0.5 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மாருதி நிறுவனம் 13,72,367 வாகனப் பதிவுகளை பெற்றுள்ளது.

Also Read

மஹிந்திரா 2வது இடம்

செப்டம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 48,038 யூனிட்டுகளை சில்லறை விற்பனை செய்த வகையில், வாகனப் பதிவுகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 44,888 பதிவுகள் இருந்த நிலையில், செப்டம்பரில் 7 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்யூவி வாகனப் பிரிவில் மஹிந்திரா வலுவான நிலையில் இருக்கிறது. மேலும், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மஹிந்திரா 4,66,020 வாகனப் பதிவுகளை பெற்றுள்ளது.

ஹூண்டாய் 3வது இடம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா செப்டம்பரில் 45,871 யூனிட்டுகள் என்ற வாகனப் பதிவுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 44,059 பதிவுகள் இருந்த நிலையில், செப்டம்பரில் 4.1 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த வாகனப் பதிவுகள் 4,24,565 யூனிட்டுகளாக உள்ளன.

Also Read

டாடா மோட்டார்ஸ் நிலை?

டாடா மோட்டார்ஸ் செப்டம்பரில் 40,941 பயணிகள் வாகனப் பதிவுகளைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 43,923 பதிவுகள் இருந்த நிலையில், செப்டம்பரில் பதிவுகள் 6.8 சதவீதம் குறைந்துள்ளன. இதன் மூலம் மஹிந்திரா மற்றும் ஹூண்டாய்க்கு பின்னால் டாடா நான்காவது இடத்தில் உள்ளது. எனினும், கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் டாடா மோட்டார்ஸ் 4,38,347 யூனிட்டுகள் என்ற பதிவுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கியா மற்றும் டொயோட்டா

கியா இந்தியா செப்டம்பர் மாதத்தில் 26,168 வாகனப் பதிவுகளைப் பெற்றுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தின் 23,896 பதிவுகளை விட 9.5 சதவீதம் அதிகமாகும்.
அடுத்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் 25,236 யூனிட்டுகள் பதிவுகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் டொயோட்டாவின் பதிவுகள் 5.8 சதவீதம் உயர்ந்துள்ளன.

இந்திய கார் சந்தையின் அடுத்த கட்டம்

செப்டம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் பண்டிகைக் கால விற்பனை தொடங்கியுள்ளதால் கார் பதிவுகளில் மேலும் வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி தொடர்ந்து மிகப்பெரிய இடைவெளியுடன் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா, ஹூண்டாய் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி உள்ளது.

குறிப்பு: வாகனப் பதிவு தரவு என்பது வாடிக்கையாளர் வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்தபோது உருவாகும் சில்லறை வாகனப் பதிவு தரவாகும். இது உற்பத்தியாளர்கள் மாதந்தோறும் அறிவிக்கும் விற்பனை அல்லது விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு சமமானது அல்ல. எனவே இரு தரவுகளையும் ஒரே அளவீடாகக் கருத இயலாது.

Article Published On: Friday, October 2, 2026, 12:43 [IST]
English summary
Sep 2026 vahan car registration top carmakers india
மேலும்... #maruti suzuki #mahindra #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out