இந்த 6 டீசல் கார்களை ஓட்டிப் பார்க்கும்போதே வித்தியாசம் தெரியும்... ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தான் ஹைலைட்!

இந்தியாவில் டீசல் கார்களுக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது. அதாவது, டீசல் கார்களை மக்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில், டீசல் என்ஜின்கள் அதிக கார்பன் மாசுவை வெளியிடக் கூடியவைகளாக உள்ளன. இதனாலேயே பெட்ரோல் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுடன், சாலைகளிலும் பெட்ரோல் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக, ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி டீசல் கார்களை விற்பனை செய்யாததற்கும் காரணம் இதுவே. இருப்பினும், இன்னமும் சில டீசல் கார்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

diesel-automatics cars that offer superior car driving experience

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): இந்தியாவில் அதிக பேர் வாங்கும் எஸ்யூவி வகை கார்களுள் முதன்மையானதாக கிரெட்டா விளங்குகிறது. இதில் 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் ஆனது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இந்த ஆப்ஷன்களில் கிரெட்டா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.05 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

கியா செல்டோஸ் (Kia Seltos): கியா நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்ட காரான செல்டோஸ் இப்போதும் டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது. கிரெட்டாவில் வழங்கப்படும் அதே 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தான் இந்த காரிலும் வழங்கப்படுகிறது. டீசல்- ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் செல்டோஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

diesel-automatics cars that offer superior car driving experience

டாடா நெக்ஸான் (Tata Nexon): மேலே கண்ட வென்யூவுக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் நெக்ஸானில் 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் உடன் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த ஆப்ஷன்கள் உடன் நெக்ஸானின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.19 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): ஹூண்டாய் நிறுவனத்தின் அளவில் சிறியதான சப்-காம்பாக்ட் எஸ்யூவி காராக விளங்கும் வென்யூ ஆனது இந்தியாவில் தற்போதைக்கு குறைந்த விலையில் கிடைக்கும் டீசல்-ஆட்டோமேட்டிக் காராக விளங்குகிறது. வென்யூவில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.88 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO): விசாலமான கேபின் வசதி உடன் எஸ்யூவி காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த மஹிந்திரா கார் ஏற்றதாக இருக்கும். மஹிந்திராவின் லேட்டஸ்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றான இதில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனும் கிடைக்கிறது. இதன் விலைகள் ரூ.17.94 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 (BMW X1): வழக்கமான பட்ஜெட் விலை கார்கள் இல்லாமல், குறைந்த விலையிலான லக்சரி காரை வாங்க விரும்புகிறீர்கள் எனில், இந்த BMW கார் ஏற்றது ஆகும். விசாலமான கேபின் மற்றும் சிறந்த பயண அனுபவத்திற்கு பெயர் பெற்ற எக்ஸ்1 காரில் 2 லிட்டர் டீசல் என்ஜின், 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்ன் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டீசல் கார்களை ஓட்டும் சுகமே தனி என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் காரை ஒருமுறை ஓட்டிவிட்டால், அதன்பின் அடிக்கடி ஓட்டவே மனம் விரும்பும். அப்படிப்பட்ட இந்த டீசல்- ஆட்டோமேட்டிக் கார்களுள் எங்களது சாய்ஸ் எதுவென்று கேட்டால், முதலாவதாக பார்த்த ஹூண்டாய் கிரெட்டா ஆகும். ஏனெனில், ஸ்டைல், தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் என்ஜின் & கியர்பாக்ஸ் என அனைத்திலும் போதுமானதாக கிரெட்டா உள்ளது.

Article Published On: Tuesday, June 9, 2026, 19:00 [IST]
English summary
Six diesel automatic cars that offer a superior car driving experience
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out