ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியா களமிறக்கப்பட்ட கார்... விற்பனை கிட்டத்தட்ட மொத்தமா படுத்தே விட்டது!
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நடந்து முடிந்த கடந்த மே மாதத்தில் மொத்தம் 5,760 கார்களை விற்பனை செய்துள்ளது. ஸ்கோடா பிராண்டில் இருந்து இந்தியாவில் தற்போதைக்கு ஆறு கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்த மே மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், அது வழக்கத்தை காட்டிலும் அதிகமா அல்லது குறைவா என்பதை பற்றிய விரிவான விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 760 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மே மாதத்தில் 6 ஆயிரத்து 740 கார்களை ஸ்கோடா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் ஸ்கோடா கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 15% குறைந்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் 980 ஸ்கோடா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்திலும் 6 ஆயிரத்து 886 ஸ்கோடா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதனுடன் ஒப்பிடுகையிலும், கடந்த மாதத்தில் ஆயிரத்து 126 ஸ்கோடா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஸ்கோடாவில் இருந்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக கைலாக் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் அதிகம் பேர் வாங்கும் ஸ்கோடா காராக கைலாக் முதலிடத்தை பிடித்து வருகிறது. இருப்பினும், வழக்கத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் கைலாக் கார்களின் விற்பனை குறைந்துள்ளது.

கடந்த மாதத்தில் வெறும் 3 ஆயிரத்து 443 கைலாக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை காட்டிலும் சுமார் ஆயிரத்து 506 கைலாக் கார்கள் அதிகமாக 2025 மே மாதத்தில் 4 ஆயிரத்து 949 கைலாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்திலும் 4,089 கைலாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
கைலாக்கிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்கோடா காராக இரண்டாவது இடத்தில் குஷாக் உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக 2021ஆம் ஆண்டின் மத்தியில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட குஷாக் சில வருடங்களுக்கு முன்பு வரையில் கைலாக் காரை போலவே அதிக யூனிட்கள் விற்பனையாகி வந்தது. ஆனால், கடந்த மே மாதத்தில் ஆயிரத்து 310 குஷாக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
| Skoda Model | May-26 | May-25 | Diff | % Change YoY |
| Kylaq | 3,443 | 4,949 | -1,506 | -30.43 |
| Kushaq | 1,310 | 644 | 666 | 103.42 |
| Slavia | 861 | 937 | -76 | -8.11 |
| Kodiaq | 146 | 208 | -62 | -29.81 |
| Superb | 0 | 2 | -2 | -100.00 |
| Octavia | 0 | 0 | 0 | 0.00 |
| Total | 5,760 | 6,740 | -980 | -14.54 |
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 851 குஷாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், 2025 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கைகள் சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 644 குஷாக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த இரு ஸ்கோடா எஸ்யூவி கார்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் செடான் வகையை சேர்ந்த ஸ்கோடா காரான ஸ்லாவியா உள்ளது. கடந்த மாதத்தில் 861 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2025 மே மாதத்தில் 937 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 830 ஸ்லாவியா கார்களை மட்டுமே ஸ்கோடா விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், கடந்த மே மாதத்தில் 146 கோடியாக் கார்களையும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா கார்களும் சில டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கின்றன. ஆனால் அவை கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.


Click it and Unblock the Notifications