மொத்தம் 4 கார் வரிசையா வருது! இதுல எது பெஸ்ட் தெரியுமா?

ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் 4 புதிய மாடல்களை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இதன்படி இந்த 2026ம்ஆண்டில் 4 கார்கள் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இது பல்வேறு செக்மெண்ட்களில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2026ம் ஆண்டிற்கான தயாரிப்பு வெளியீட்டு பட்டியலை உறுதி செய்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் 4 புதிய கார்களை பல்வேறு செக்மெண்ட்களில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதில் தனது ஸ்கோடா குஷாக் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனும் ஒன்று தான்.

Skoda 4 New Models

இது போக அந்நிறுவனம் அதிக பெர்ஜபார்மென்ஸ் நிறைந்த கோடியாக் ஆர்எஸ் என்ற வாகனத்தை இரண்டாம் காலாண்டிலெ வெளியிட திட்டமிட்டுள்ளது. அடுத்தாக ஸ்போர்ட்டியர் கைலாக் ஸ்போர்ட் லைன் + வாகனத்தை 3ம் காலாண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டவியா ஆர்எஸ் வாகனம் 4ம் காலாண்டில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதன் அப்டேட் செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார் விஷூவல் அப்டேட் உடன் வரவுள்ளது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க வடிவமைப்பு புதிய பம்பர்கள், ரிவைஸ் செய்யப்பட்ட எல்இடி அம்சங்கள், கோடியாக் காரில் உள்ளதை போல கோடியாக ஹெட்லைட்டுகள், 17 இன்ச் அலாய் வீல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளது.

Skoda 4 New Models

பின்பக்கம் கனெக்டெட் எல்இடி டெயில் லைட் லைட் பார் உடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில் கேட், அப்பகுதியில் முன்முறையாக பின்பக்கசீட்டில் மசாஜ் அம்சம், பானரோமிக் சன் ரூஃப், முழு எல்இடி கேபின் லைட்டிங், முன்பக்க பார்க்கிங் சென்சார், பின்பக்கம் இலுமினேட் செய்யக்கூடியஸ்கோடா லெட்டரிங், ஸ்கோன்ஷியல் டர்ன் இன்டிகேட்டர், லெதர் அப்ஹோல்சரி, வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்டுகள்,

உட்பகதியில் 10.25 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள, 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவடல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகியன உள்ளன.

Skoda 4 New Models

அடுத்ததாக கோடியாக் ஆர் எஸ் கார் 2ம் காலாண்டில் வருகிறது. இதில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 261 பிஎச்பி பவர் 400 என்எம் டார்க் திறன் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் உடன் வருகிறது. இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6.3 நொடியில் பிக்கப் செய்துவிடும்.

3ம் காலாண்டில் ஸ்கோடா கைலாக் ஸ்போர்ட் லைன் + கார் வருகிறது. இநப்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 115 பிஎஸ் பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த காரின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சில மாற்றங்கள் வருகிறது.

ஆக்டவியா ஆர்எஸ் கார் 2025ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும் குறைவான எண்ணிக்கையிலேயே வந்தது. வெறும் 100 கார்கள் வந்தது. இந்த காருக்கு புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களில் அத்தனை கார்களும் விற்று தீந்தது. இதன் காரணமாக கூடுதலாக 2026ல் கார்களை இறக்க திட்டமிட்டுள்ளது. இது இந்தாண்டு இறுதியில் வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் வரிசையாக 4 கார்களை களம் இறக்குகிறது. இதில் குஷாக் கார் நல்ல வரவேற்ப்பை பெறும் மற்ற கார்கள் அதன் செக்மெண்டிற்கு ஏற்ப எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. ஆக்டவியா ஆர்எஸ் கார் இ்நதாண்டும் விற்பனை வந்த சில நிமிடங்களில் மொத்தமாக தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 22, 2026, 20:45 [IST]
English summary
Skoda confirms launching 4 new models this year in india
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X