சிஎம் தோழியே நெனச்சாலும் வாங்கறது கஷ்டம்! கோடி கோடியா கொட்டினாலும் இத்தன பேருக்கு மட்டும்தான் விப்பாங்களா!

ஒரு சில நிறுவனங்கள் தங்கள் கார்களின் செயல்திறன் மிக்க வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளன. ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் 'என் லைன்' (N Line) என்ற பெயரில் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) ஆகிய கார்களின் 'என் லைன்' வெர்ஷன்கள் இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. வழக்கமான ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் வெனியூ மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களை விட, அவற்றின் 'என் லைன்' வெர்ஷன்கள் டிசைன், செயல்திறன் ஆகிய அம்சங்களில் மேம்பட்டதாக இருக்கும்.

Skoda Kodiaq RS

இதேபோல் ஸ்கோடா (Skoda) நிறுவனமும் 'ஆர்எஸ்' (RS - Rally Sport) என்ற பெயரில், தனது கார்களின் செயல்திறன் மிக்க வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (Skoda Octavia RS) இதற்கு ஒரு உதாரணம். ஸ்கோடா நிறுவனம் ஆக்டோவியா ஆர்எஸ் காரின் முதல் தொகுப்பை கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

முதல் தொகுப்பில் இந்தியாவிற்கு ஒட்டுமொத்தமாக 100 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்கள் ஒதுக்கப்பட்டன. அவை அனைத்தும் வெறும் 20 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன. முன்பதிவுகள் (Bookings) தொடங்கிய 20 நிமிடங்களிலேயே 100 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்களையும் வாடிக்கையாளர்கள் 'புக்கிங்' செய்து விட்டனர்.

Skoda Octavia RS

இதை தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அனேகமாக வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இம்முறை முன்பை விட சற்று அதிக ஆக்டேவியா ஆர்எஸ் கார்களை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவிற்கு ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஸ்கோடா நிறுவனம் கோடியாக் ஆர்எஸ் (Skoda Kodiaq RS) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள வழக்கமான ஸ்கோடா கோடியாக் காரின் செயல்திறன் மிக்க வெர்ஷன்தான் ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ்.

ஸ்கோடா கோடியாக் காரானது, எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் ஆர்எஸ் பேட்ஜ் உடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை கோடியாக் ஆர்எஸ் பெறவுள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரானது, செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் கார் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது கோடியாக் ஆர்எஸ் காரின் டீசர் புகைப்படம் (Teaser Image) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 22.06.2026 என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வரும் ஜூன் 22ம் தேதி ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அல்லது அந்த தேதியில் ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்படலாம். ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாது.

முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மட்டுமே விற்பனை செய்யப்படும். இப்படி விற்பனை செய்யப்படும் கார்களை சிபியூ (CBU - Completely Built-Up) என்பார்கள். ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரும் கூட, சிபியூ வழியில்தான் இந்தியாவிற்கு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவிற்கு வெறும் 50 ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் கார்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 50 பேரால் மட்டுமே இந்த காரை வாங்க முடியும். ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான், ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரிலும் பொருத்தப்பட்டிருக்கும்.

அதிகபட்சமாக 261 பிஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.3 வினாடிகளிலேயே எட்டி விடும்.

அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 231 கிலோ மீட்டர்களாக இருக்கும். இது ஆல் வீல் டிரைவ்ஸ் சிஸ்டத்தையும் கொண்டிருக்கும். எனவே ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரானது, ஆஃப் - ரோடு சாகச பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரின் விலை 50-60 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அறிவிக்கப்படும்.

Article Published On: Thursday, June 11, 2026, 16:46 [IST]
English summary
Skoda kodiaq rs launch date bookings expected price engine performance
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out