டொயோட்டா ஃபார்ச்சூனர் கொட்டத்தை அடக்க வரும் புதிய கார்! புக்கிங் தொடங்கியதால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!
இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq). இதன் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனான ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் (Skoda Kodiaq RS), வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காருக்கு ஜூன் 22ம் தேதியில் இருந்து முன்பதிவுகள் (Bookings) ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள இந்திய வாடிக்கையாளர்கள், ஸ்கோடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ, ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 195 kW பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4x4 டிரைவ் சிஸ்டமும் ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரில் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 360 டிகிரி கேமரா, 9 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, ஹைட்ராலிக் பிரேக் அஸிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை எல்லாம், ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

டிசைனை (Design) பொறுத்தவரையில், எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லைட்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் கிடைமட்டமான லைட் ஸ்ட்ரிப் உடன் முன் பகுதியில் பெரிய க்ரில் அமைப்பு போன்றவை எல்லாம், ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன.
மற்ற வசதிகளை பொறுத்தவரையில், ஸ்லைடிங் பனரோமிக் சன்ரூஃப், 32.77 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 26.03 செமீ விர்ச்சூவல் காக்பிட், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கீலெஸ் எண்ட்ரி போன்ற வசதிகள் எல்லாம், ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரின் விலை எவ்வளவு? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரின் விலை எவ்வளவாக இருக்கலாம்? என்ற யூகம் இருக்கிறது.
வழக்கமான ஸ்கோடா கோடியாக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 36.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 46.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை ஸ்கோடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இதை வைத்து பார்க்கும்போது, ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரின் விலை 50-55 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் காரின் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற கார்களுக்கு எல்லாம், ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications