போர், துரந்தர்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்! நாளைக்கு வரப்போற இந்த கார் பத்திதான் ஊரே பேசுது! கிலியில் மாருதி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த ஸ்கோடா குஷாக் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், நாளை (மார்ச் 21) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஸ்கோடா குஷாக் கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து பார்த்தால், தற்போதுதான் முதல் முறையாக மிகப்பெரிய அப்டேட் ஒன்றை ஸ்கோடா குஷாக் பெறுகிறது. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஸ்கோடா குஷாக் காருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

Skoda Kushaq Facelift

இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options): ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. அவை 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இதில், 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Skoda Kushaq Facelift

வசதிகள் (Features): ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக சன்ரூஃப், பிரீமியம் 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டுள்ளது.

ஆனால் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் எல்லாம், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படுமா? என்பது சந்தேகம்தான். எனினும் அப்டேட் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்பர்கள் போன்ற அம்சங்கள் எல்லாம் ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்படவுள்ளன.

வேரியண்ட்கள் (Variants): கிளாசிக் ப்ளஸ், சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், ப்ரஸ்டீஜ் மற்றும் மாண்டீ கார்லோ என ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மொத்தம் 5 வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. டெலிவரி (Delivery) பணிகள் அடுத்த மாதத்தில் (ஏப்ரல்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகையால், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), டாடா சியரா (Tata Sierra) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகள் ஏற்படலாம்.

அத்துடன் ஹோண்டா எலவேட் (Honda Elevate), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கும், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகையால், விற்பனையில் நெருக்கடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, March 20, 2026, 15:08 [IST]
English summary
Skoda kushaq facelift india launch tomorrow engine options safety features and more details
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+