ஷோரூமில் நிறுத்தி வைக்க இடமில்லாமல் வரிசைக்கட்டி நிற்கும் புதிய ஸ்கோடா கார்! புக்கிங் போட்டவர்கள் ஹாப்பி!
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தில் இருந்து புதியதாக குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Kushaq Facelift) கார் கடந்த மார்ச் 21ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், புதிய குஷாக் காரின் மிட் வேரியண்ட் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) ஒன்றில் காட்சித் தந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ 'ஜிஏ.ஆட்டோமோட்டிவ்' (GA.Automotive) என்கிற யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.10.69 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து புதிய ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிளாசிக்+, சிக்னெச்சர், ஸ்போர்ட்லைன், பிரெஸ்டீஜ் மற்றும் மான்டே கார்லோ என ஐந்து விதமான வேரியண்ட்களில் புதிய குஷாக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஸ்போர்ட்லைன் (Sportline) என்கிற மிட் வேரியண்ட்டை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

தற்போது டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்தில் காட்சித்தந்து இருக்கும் புதிய குஷாக் காரின் ஸ்போர்ட்லைன் வேரியண்ட் கார்பன் ஸ்டீல் என்கிற நிறத்தில் உள்ளது. மிட் வேரியண்ட்டாக இருப்பினும், இந்த காரின் முன்பக்கத்தில் கிரில் பகுதியின் மீது எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லைட்கள் இடம்பெற்றுள்ளன. காரின் பின்பக்கத்தில் மேற்கூரை உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லரை பார்க்க முடிகிறது.
அத்துடன், பின்பக்க விண்ட்ஷீல்டிற்கும் வைபர், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் பின் கதவில் ஒளிரக்கூடிய 'SKODA' எழுத்துகளையும் இந்த காரின் பின்பக்கத்தில் பார்க்க முடிகிறது. மேலும், இந்த ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டின் மேற்கூரை கம்பிகள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, 17-இன்ச் சக்கரங்கள் மற்றும் முன் & பின்பக்க பம்பர்களில் கருப்பு நிறத்திலான ட்ரீட்மெண்ட்டையும் பார்க்க முடிகிறது.

இந்த கருப்பு நிற ட்ரீட்மெண்ட் காரின் B-பில்லர்கள், கிரில் மற்றும் ஃபெண்டர்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கோடா பேட்ஜ்களிலும் இடம்பெற்றுள்ளன. குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் மிட் வேரியண்ட்டான இதில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், 2-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் சக்கரம், பல வண்ணங்களில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் கேபினுக்குள் சுற்றிலும் வண்ண விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், இருக்கைகளில் துணியால் ஆன அப்ஹோல்ஸ்டரி, 10-இன்ச் டச் ஸ்க்ரீன் திரை, சிங்கிள்-பேன் சன்ரூஃப், அலுமினியத்திலான பெடல்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்ஸ், முன் இருக்கைகளுக்கு மத்தியில் மடிக்கக்கூடிய ஆர்ம்ரெஸ்ட், உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் சீட், க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், கூல்டு க்ளோவ்பாக்ஸ், வயர்லெஸ் போன் மிரரிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்ஸ் உள்ளிட்டவையும் இந்த ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன.
புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்போர்ட்லைன் வேரியண்ட் 1 லிட்டர் டி.எஸ்.ஐ பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பவர்ஃபுல்லான 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ பெட்ரோல் என்ஜினை பெறுவதற்கு பிரெஸ்டீஜ் அல்லது மான்டே கார்லோ போன்ற விலைமிக்க டாப் வேரியண்ட்களை வாங்க வேண்டியதாக இருக்கும். இருப்பினும், ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மார்க்கெட்டில் கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரை ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரை போதுமான ஆடம்பர வசதிகள் உடன் வாங்குவதற்கு ஸ்போர்ட்லைன் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். ரூ.14.74 லட்சம் (மேனுவல்) மற்றும் ரூ.15.74 லட்சம் (ஆட்டோமேட்டிக்) என்கிற விலைகளில் குஷாக் ஃபேஸ்லிஃப்ட் ஸ்போர்ட்லைன் கார் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








