டாடா, மாருதி இப்பவே வெலவெலத்து போயிருக்கும்! மைலேஜை வாரி வழங்கும் விலை குறைவான காரை களமிறக்கும் பிரபல நிறுவனம்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா கைலக் (Skoda Kylaq). தற்போதைய நிலையில் ஸ்கோடா நிறுவனத்தின் முதுகெலும்பாக இருப்பதே கைலக்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஒவ்வொரு மாதமும் ஆரோக்கியமான விற்பனை எண்ணிக்கையை ஸ்கோடா கைலக் பதிவு செய்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 3,800 ஸ்கோடா கைலக் கார்கள் விற்பனையாகி கொண்டுள்ளன. ஸ்கோடா நிறுவனத்திற்கு இது மிகவும் பெரிய எண்ணிக்கை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இருப்பினும் இந்த விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும் என ஸ்கோடா நிறுவனம் விரும்புகிறது.

Skoda Kylaq

இதற்காக கைலக் காரின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்கோடா கைலக் காரின் நேரடி போட்டி மாடல்களான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்களில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே ஸ்கோடா கைலக் காரிலும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுவது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. ஸ்கோடா கைலக் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் டிஎஸ்ஐ இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. அனேகமாக இந்த இன்ஜின் உடன்தான் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Skoda Kylaq Seat

பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 ஹெச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் திறனை உருவாக்குகிறது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கினால், 100 ஹெச்பி பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறன் மட்டுமே அதிகபட்சமாக வெளிப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக பெட்ரோல் உடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி மூலமாக இயங்கினால், பவர் அவுட்புட் குறைவாகதான் இருக்கும்.

இருப்பினும் சிறப்பான மைலேஜை உறுதியாக எதிர்பார்க்க முடியும். இதுதவிர சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் 100 ஹெச்பி பவர் மற்றும் 160 என்எம் டார்க் என்பதும் மோசமான பவர் அவுட்புட் எல்லாம் கிடையாது. அதுவும் நல்ல பவர் அவுட்புட்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் சிஎன்ஜி வெர்ஷனில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே வழங்குவதற்கு ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்கோடா நிறுவனம் கைலக் காரின் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்குவது குறித்து தற்போது தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா கைலக் காரில் சிஎன்ஜி வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டால், அது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய போட்டி மாடல்களுக்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப விலை வெறும் 7.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இது ஸ்கோடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்யும் மிகவும் விலை குறைவான கார் என்ற பெருமையை கைலக் தன்வசம் வைத்துள்ளது. இதன் காரணமாகவே அதன் விற்பனையும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட ஒரு காரில் சிஎன்ஜி வெர்ஷன் வந்தால், அது வரவேற்கத்தக்க விஷயமாகவே இருக்கும். ஸ்கோடா கைலக் ஸ்டாண்டர்டு வெர்ஷனை போலவே, அதன் சிஎன்ஜி வெர்ஷனின் விலையும் மிகவும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளுக்கு நாம் சற்று காத்திருப்பது அவசியம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 22, 2026, 22:58 [IST]
English summary
Skoda kylaq cng india launch details maruti suzuki brezza tata nexon rival
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+