விலையில் மாருதியை விட தரமட்டத்துக்கு இறங்கிய ஸ்கோடா... ஆனா வசதிகளை பாத்தா சொகுசு கார் மாதிரி இருக்கு...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா கைலக் (Skoda Kylaq). இதுதான் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் விலை குறைவான ஸ்கோடா கார் (Most Affordable Skoda Car) ஆகும். இதன் காரணமாக ஸ்கோடா கைலக் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
இந்த சூழலில், கடந்த 2025-26 நிதியாண்டிற்கான (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) ஸ்கோடா கைலக் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ஸ்கோடா நிறுவனம் கடந்த 2025-26 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 49,089 கைலக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இதன் மூலம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ஸ்கோடா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக கைலக் உருவெடுத்துள்ளது. ஸ்கோடா கைலக் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி அதன் குறைவான விலைதான் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ஸ்கோடா கைலக் காரின் நேரடி போட்டி மாடலான மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை விட (Maruti Suzuki Brezza) 67 ஆயிரம் ரூபாய் குறைவு ஆகும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.26 லட்ச ரூபாயாக உள்ளது. ஸ்கோடா கைலக் கார் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, இது மிகவும் பாதுகாப்பானது ஆகும். ஏனெனில் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் (Crash Tests), ஸ்கோடா கைலக் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்றுள்ளது.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இரண்டு தரப்பினருக்குமான மோதல் சோதனைகளிலும் ஸ்கோடா கைலக் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் இருந்து டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ட்ராக்ஸன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என ஒட்டுமொத்தமாக 25க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் (Safety Features), ஸ்கோடா கைலக் காரில் வழங்கப்படுகின்றன. அத்துடன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் மற்ற வசதிகளையும் ஸ்கோடா கைலக் கார் கொண்டுள்ளது.
இதில், 20.32 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 25.6 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கூல்டு க்ளவ் பாக்ஸ், முன் பகுதியில் டிரைவர் மற்றும் கோ டிரைவருக்கு வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. இதன் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்படுகின்றன. இது போன்ற காரணங்களால்தான், ஸ்கோடா கைலக் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மட்டுமல்லாது, டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3Xo), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுக்கும், ஸ்கோடா கைலக் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








