ஸ்கோடா கைலாக் காரில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

ஸ்கோடா கைலாக் எஸ்யூவியில் கூடுதல் கவர்ச்சிகர அம்சங்களுடன் கூடிய புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கைலாக் ஸ்போர்ட்லைன் என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.11.32 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகளை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட், கைலாக் எஸ்யூவியின் ஏழாவது வேரியண்ட்டாக இணைந்துள்ளது. கைலாக் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டின் முக்கிய சிறப்புகளாக அதன் வெளிப்புறத்தில் பல கவர்ச்சிகரமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Skoda Kylaq Sportline

வழக்கமான கைலாக் மாடலைக் காட்டிலும் கருப்பு வண்ணத்திலான பாகங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அடர் கருப்பு வண்ண பெயிண்ட் செய்யப்பட்ட ரியர் வியூ மிரர்கள், கருப்பு வண்ண டிஃபியூசர்கள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இதனுடன் டூயல்-டோன் ஃப்ளோட்டிங் மேற்கூரை அமைப்பு, 17 அங்குல கருப்பு வண்ண அலாய் வீல்கள் ஆகியவை காருக்கு கூடுதல் கவர்ச்சியையும், தனித்துவத்தையும் கொடுக்கின்றன.

பின்புறத்திலும் பல அம்சங்கள் உள்ளன. கதவில் ஸ்போர்ட்லைன் பேட்ஜ், ரியர் ஸ்பாய்லர் மற்றும் C-பில்லரில் வழங்கப்படும் ஸ்போர்ட்லைன் ஸ்டிக்கர் ஆகியவையும் இந்த வேரியண்ட்டின் தனித்துவத்தை அதிகரிக்கின்றன.

மேலும், ஸ்போர்ட்லைன் தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள் பிரத்யேக ஆக்சஸரீகள் கொண்ட பேக்கையும் தேர்வு செய்யலாம். இதில் முன்புற பம்பர் கார்னர் கார்னிஷ், ஸ்கோடா லோகோவுடன் கூடிய ஃபெண்டர் கார்னிஷ் உள்ளிட்ட பல கூடுதல் அம்சங்களையும் பெற முடியும்.

காரின் உட்புறத்திலும் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் தனித்துவம் பெற்றுள்ளது. டேஷ்போர்டு, உட்புற கூரை அப்ஹோல்ஸ்ட்ரி, கதவுகளில் கருப்பு வண்ணத்திலான பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய செயற்கை லெதர் இருக்கைகள், ஸ்போர்ட்லைன் லேபிள்கள் மற்றும் அலுமினியம் பெடல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி ஆகியவையும் இதில் உள்ளன. இந்த காரில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் உள்ளன.

புதிய கைலாக் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டில் 1.0 டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

பாதுகாப்பு அம்சங்களிலும் ஸ்கோடா கைலாக் எஸ்யூவியானது சிறப்பான தேர்வாக உள்ளது. இந்த கார் பாரத் என்சிஏபி மோதல் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. தவிரவும், ஆறு ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், ஸ்கோடா சூப்பர் கேர் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் வாரண்டி, 4 ஆண்டுகள் சாலை அவசர உதவி தட்டம் மற்றும் லேபர் சார்ஜ் இல்லாத 4 சர்வீஸ் திட்டங்களும் உள்ளன.

புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட் மட்டுமின்றி, கைலாக் வரிசையின் மற்ற வேரியண்ட்களிலும் சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக Classic மற்றும் Classic+ வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் ஏசி ஸிட்ம், ரியர் டீஃபாகர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆரம்ப நிலை வேரியண்ட்டுகளிலும் கூடுதல் வசதிகளை பெற முடியும்.

புதிய ஸ்கோடா கைலாக் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.11.32 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ.12.32 லட்சம் எக்ஸ்ஷோரும் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சிக்னேச்சர் ப்ளஸ் என்ற நடுத்தர விலை வேரியண்ட்டிற்கும், பிரஸ்டீஜ் ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட்டிற்கும் இடையிலான விலையில் வந்துள்ளது. இரண்டு வேரியண்ட்டுகளுக்கும் இடையில் ரூ.60,000 விலை வித்தியாசத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Article Published On: Thursday, August 20, 2026, 18:51 [IST]
English summary
Skoda kylaq sportline launched india price features
மேலும்... #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out