தரமட்டத்துக்கு இறங்கிய ஸ்கோடா! அடிமாட்டு விலையில் புதிய கார்! மாருதி, டாடா வெடவெடத்து போயிருக்கும்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா கைலக் (Skoda Kylaq). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஸ்கோடா கைலக் கார், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதன் டெலிவரி பணிகள் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி தொடங்கப்பட்டது.
சரியாக ஒரு ஆண்டு கடந்த நிலையில், அதே நாளில், அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி (நேற்று), ஸ்கோடா கைலக் காரின் உற்பத்தியில் புதிய மைல்கல் (Milestone) ஒன்று எட்டப்பட்டுள்ளது. 50 ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல் ஆகும்.

ஸ்கோடா நிறுவனத்தின் தொழிற்சாலை மஹாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் இயங்கி வருகிறது. அங்குதான் ஸ்கோடா கைலக் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஸ்கோடா கைலக் காரின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணம் அதன் மிகவும் குறைவான விலைதான். இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 7.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
இது ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதன் மூலம் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்வதிலேயே மிகவும் விலை குறைவான கார் என்ற பெருமையை கைலக் தன்வசம் வைத்துள்ளது. இந்த குறைவான விலைதான் ஸ்கோடா கைலக் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில் 1 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை (Engine Option) ஸ்கோடா கைலக் கார் கொண்டுள்ளது. ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன்தான் என்றாலும் கூட, இது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆகும்.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Option) கொடுக்கப்பட்டுள்ளன.
இது விலை குறைவான காராக இருந்தாலும் கூட, ஸ்கோடா நிறுவனம் வசதிகளில் (Features) சமரசம் செய்யவில்லை. இந்த காரின் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதியுடன் கிடைக்கும் விலை குறைவான கார்களில் ஸ்கோடா கைலக்கும் ஒன்றாகும்.
இதுதவிர வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் ஸ்கோடா கைலக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை எல்லாம் ஸ்கோடா கைலக் கொண்டுள்ளது. இது பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனையில் (Crash Test) முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5-star Safety Rating) பெற்ற கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்களுக்கு எல்லாம், ஸ்கோடா கைலக் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








