மாருதி காரை விட குறைவான விலையில் சொகுசு நிறுவனத்தின் கார்! இந்தியாவை மிரள விட போகும் வெளிநாட்டு நிறுவனம்!
செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனத்தின் கார்கள் (Skoda Cars), ஒரு சமயத்தில் இந்தியாவின் மிடில்-க்ளாஸ் மக்களுக்கு எட்டாகனியாகவே இருந்து வந்தன. விலை அதிகம் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகம் போன்ற காரணங்களால், ஸ்கோடா ஷோரூம்களுக்கு கார்களை பற்றி விசாரிக்க செல்வதற்கு கூட பலரும் தயங்கினர். ஆனால் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) இவை அனைத்தையும் மாற்றியுள்ளது.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ஸ்கோடா கார் (More Affordable Skoda Car) இதுதான். ஸ்கோடா கைலக் காரில் தற்போதைய நிலையில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்படுகிறது. இதன் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டிப்ட்ரானிக் (ஆட்டோமேட்டிக்) கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்படுகின்றன.

அத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 25.60 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 20.32 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், கீ லெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் கூல்டு க்ளவ் பாக்ஸ் போன்ற வசதிகளும் (Features), ஸ்கோடா கைலக் காரில் வழங்கப்படுகின்றன.
அதே நேரத்தில் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம், ஸ்கோடா கைலக் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

ஸ்கோடா கைலக் கார் தற்போதைய நிலையில் மொத்தம் 6 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை கிளாசிக், கிளாசிக் ப்ளஸ், சிக்னேச்சர், சிக்னேச்சர் ப்ளஸ், ப்ரஸ்டீஜ் மற்றும் ப்ரஸ்டீஜ் ப்ளஸ் ஆகியவை ஆகும். இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டாக இருப்பது கிளாசிக் ஆகும். அதன் விலை வெறும் 7.59 லட்ச ரூபாய் மட்டுமே.
நேரடி போட்டி மாடலான மாருதி சுஸுகி ப்ரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) காரின் ஆரம்ப விலையுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.26 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் ஸ்கோடா கைலக் காரின் டாப் வேரியண்ட்டான ப்ரஸ்டீஜ் ப்ளஸ் வேரியண்ட்டின் விலை 12.99 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே ஸ்கோடா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், ஸ்கோடா கைலக் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.
ஆனால் ஸ்கோடா நிறுவனம் கைலக் காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும் என விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்கோடா கைலக் காரில் ஏராளமான அப்டேட்கள் செய்யப்படவுள்ளன. ஸ்போர்ட்லைன் ப்ளஸ் என்ற பெயரில் புதிய வேரியண்ட் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது இதில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இதுதான் ஸ்கோடா கைலக் காரின் டாப் வேரியண்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதுதான் ஸ்கோடா கைலக் காரின் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டாக இருக்கும். அதற்கு ஏற்ப ஏராளமான புதிய வசதிகள் இந்த வேரியண்ட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அதேபோல் டிசைனிலும் (Design), மற்ற வேரியண்ட்களுடன் ஒப்பிடும்போது இது தனித்து தெரியும் என நம்பலாம்.
ஸ்கோடா கைலக் காரின் இந்த புதிய டாப் வேரியண்ட் வரும் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர ஸ்கோடா நிறுவனம் கைலக் காரில் கூடிய விரைவில் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனையும் வழங்கவுள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனின் மைலேஜ் (Mileage) அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை எல்லாம் தவிர ஸ்கோடா நிறுவனம் கைலக் காரில் புதிதாக 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஒன்றை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தற்போது வழங்கப்பட்டு வரும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை விட பராமரிப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா நிறுவனம் கைலக் காரில் பல்வேறு அப்டேட்களை செய்யவுள்ளதால், எதிர்காலத்தில் அதன் விற்பனை வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது அதன் போட்டி மாடல்களான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போன்ற கார்களுக்கு எல்லாம் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








