ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் மீண்டும் அறிமுகம்.. 50 யூனிட்டுகள் மட்டுமே, முன்பதிவுக்கு முந்துங்கள்!!

இந்திய கார் பிரியர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள பவர்ஃபுல்லான ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் பேட்ச் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தியாவுக்காக மேலும் 50 ஆக்டேவியா ஆர்எஸ் கார்களை ஸ்கோடா ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த காருக்கு ரூ.56.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த வாரம் முதல் டெலிவரி கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

சாதாரண ஆக்டேவியா காரைவிட அதிக செயல்திறன் மிக்க இந்த ஆக்டேவியா ஆர்எஸ் காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 265 பிஎஸ் பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Skoda Octavia RS

வெறும் 6.4 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் வாய்ந்த செடான் கார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச வேகம் எலக்ட்ரானிக் முறையில் மணிக்கு 250 கிமீ என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரின் செயல்திறனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், பிரத்யேக ஸ்டீயரிங் அமைப்பு மற்றும் மேம்பட்ட சேஸி அமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளன.

Also Read

வெளிப்புற தோற்றத்திலும் வழக்கமான ஆக்டேவியாவை விட ஆர்எஸ் மாடல் அதிக ஸ்போர்ட்டியான வடிவமைப்பை பெற்றுள்ளது. எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், டைனமிக் இன்டிகேட்டர்களுடன் கூடிய எல்இடி டெயில்லைட்டுகள், அதிக பளபளப்புடன் கூடிய கிளாஸி பிளாக் டிசைன் அம்சங்கள் மற்றும் 19 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை காரின் ஸ்போர்ட்டி தோற்றத்தை வலுப்படுத்துகின்றன. இந்த காரில் 600 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருப்பதுடன், பின்புற இருக்கைகளை மடித்தால் இதை 1,555 லிட்டர் வரை அதிகரிக்க முடியும்.

Skoda Octavia RS

உட்புறத்திலும் பல்வேறு கண்கவர் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உயர்தர லெதர் இருக்கைகள், சிவப்பு நிற கான்ட்ராஸ்ட் தையல் வேலைப்பாடுகள், மெமரி வசதியுடன் கூடிய எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஸ்போர்ட்ஸ் முன் இருக்கைகள், ஹீட்டிங் மற்றும் மசாஜ் வசதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் 32.77 செமீ இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவையும் உள்ளன. வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

Also Read

பாதுகாப்பைப் பொறுத்தவரை 10 ஏர்பேக்குகள், ADAS தொழில்நுட்பம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், தானியங்கி அவசரகால பிரேக் சிஸ்டம், லேன் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த கார் தனித்துவமானது மட்டுமின்றி நீண்ட வரலாறும் கொண்டது. கடந்த 1974ம் ஆண்டு 180 RS மற்றும் 200 RS ஆகிய இரண்டு புரோட்டோடைப் கார்களில் பயன்படுத்தப்பட்ட RS என்ற பேட்ஜ், பின்னர் மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலகில் முக்கியத்துவம் பெற்றது. 2000ம் ஆண்டு காலக்கட்டத்தில் தயாரிப்பு காரான ஆக்டேவியா காரில் இந்த RS பேட்ஜ் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இது 2004-ம் ஆண்டு அறிமுகமாகி, நாட்டின் முதல் டர்போ பெட்ரோல் காராகவும் வந்தது நினைவுக்கூறத்தக்கது.

இந்தியாவில் கிடைக்கும் புதிய ஆக்டேவியா ஆர்எஸ் கார் மாம்பா க்ரீன், வெல்வெட் ரெட் மற்றும் மேஜிக் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த காருக்கு 4 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டி மற்றும் 4 ஆண்டுகள் இலவச சாலை அவசர உதவித் திட்டம், 4 இலவச சர்வீஸ்களும் வழங்கப்படுகின்றன.

Article Published On: Friday, September 4, 2026, 14:59 [IST]
English summary
Skoda octavia rs launched again in india 50 units price rs 56 69 lakh
மேலும்... #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out