விலை கம்மிதான்! ஆனா சிஎம் பேரனே நெனச்சாலும் வாங்க முடியாது! இந்த கார் மறுபடியும் இந்தியாவுக்கு வருதா!
இந்தியாவில் ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் கார்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (2025 Skoda Octavia RS) காரின் அறிமுகத்தின்போதே அது நன்றாக தெரிந்தது. இது செயல்திறன் மிக்க செடான் ரக கார் ஆகும்.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தைக்கு வெறும் 100 ஆக்டேவியா ஆர்எஸ் கார்களை மட்டுமே ஒதுக்கியிருந்தது. கடந்த 2025ம் ஆண்டு முன்பதிவு (Booking) தொடங்கப்பட்ட வெறும் 20 நிமிடங்களிலேயே இந்த 100 கார்களும் விற்பனையாகி விட்டன. எனவே அதற்கு பிறகு வேறு யாராலும் 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை வாங்க முடியாது என்ற சூழல் உருவானது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. ஆம், ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பை இந்தியாவிற்கு கொண்டு வர தயாராகி வருகிறது. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பு, 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டின் 4வது காலாண்டில்தான், அதாவது அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில்தான், ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பு இந்தியாவிற்கு வரும் என தெரிகிறது. இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் 2வது தொகுப்பில் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவிற்கு எத்தனை ஆக்டேவியா ஆர்எஸ் கார்களை ஒதுக்கும்? என்பது உறுதியாக தெரியவில்லை. 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் விலை 49.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கருதப்படுகிறது.
2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ EVO டர்போசார்ஜ்டு 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 261 பிஹெச்பி பவர் மற்றும் 370 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.9 வினாடிகளிலேயே எட்டி விடும் திறன் வாய்ந்தது. அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா நிறுவனம் வெகு சமீபத்தில் குஷாக் காரின் ஃபேஸ்லிஃப்ட் (2026 Skoda Kushaq Facelift) காரை அறிமுகம் செய்தது. அத்துடன் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) காரில் புதிய வேரியண்ட்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதவிர ஸ்கோடா நிறுவனம் கைலக் காரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஆலோசனை செய்து வருகிறது.
இந்த வரிசையில்தான் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் 2வது தொகுப்பு இந்தியாவிற்கு வரவுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஸ்கோடா நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மிகவும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளது. இது ஸ்கோடா ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








