ஒரே சார்ஜில் 936 கிமீ பயணித்த ஸ்கோடாவின் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி... புதிய சாதனை படைத்தது!

எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் குறித்த எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஸ்கோடா நிறுவனம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியான ஸ்கோடா பீக் 90 (Škoda Peaq 90) அண்மையில் நடத்தப்பட்ட சோதனையின்போது பேட்டரி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 936 கிமீ பயணித்து புதிய சாதனைப் படைத்துள்ளது.

குறிப்பாக, ஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒரே சார்ஜில் இவ்வளவு தூரம் சென்றிருப்பது இந்த சாதனை முயற்சியின் முக்கிய சிறப்பாக குறிப்பிடப்படுகிறது. இந்த சாதனை முயற்சியை TÜV SÜD என்ற சான்றிதழ் மற்றும் சோதனை அமைப்பில் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது.

Skoda Peaq 90 EV SUV

பயண தூரம்

இந்த சாதனைப் பயணம் ஸ்கோடா நிறுவனத்தின் தாயகமான செக் குடியரசில் உள்ள Mladá Boleslav தொழிற்சாலை பகுதியில் இருந்து தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி மதியம் புறப்பட்ட ஸ்கோடா பீக் 90 எலெக்ட்ரிக் எஸ்யூவி ஜெர்மனி வழியாக நெதர்லாந்தை சென்றடைந்தது. இறுதியாக Zandvoort கடற்கரைப் பகுதியில் இந்த சாதனைப் பயணம் நிறைவடைந்தது.

Also Read

இந்த முழுப் பயணத்திலும் காரின் பேட்டரி இடையில் எங்கும் சார்ஜ் செய்யப்படவில்லை. இந்த நீண்ட பயணத்தின் போது ஓட்டுனர்கள் மட்டும் மாறிக்கொண்டனர். மேலும், ஓட்டுனர்களும் தேவையான ஓய்வு மற்றும் உணவு இடைவேளைகளையும் எடுத்துக் கொண்டனர். இறுதியில் 936 கி.மீ. தூரத்தை கடந்தபோது, காரின் சராசரி மின் நுகர்வு வெறும் 100 கிமீ தூரத்திற்கு 9.2 kWh என்ற அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Skoda Peaq 90 EV SUV

கூடுதல் ரேஞ்ச்

ஸ்கோடா பீக் 90 மாடலின் அதிகாரப்பூர்வ WLTP சோதனைகளின்படி, அதிகபட்சமாக 647 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சாதனை முயற்சி பயணத்தில் 936 கிமீ சென்றுள்ளது. அதாவது, அதிகாரப்பூர்வ ரேஞ்சை விட 289 கிமீ தூரம் வரை கூடுதலாக பயணித்துள்ளது.

Also Read

எனினும், இது வழக்கமான வாடிக்கையாளர் ஓட்டும்போது கிடைக்கும் ரேஞ்ச் அல்ல என்பதை ஸ்கோடா தெளிவுபடுத்தியுள்ளது. அதிகபட்ச ரேஞ்சை பெறுவதற்காக குறிப்பிட்ட பாதை தேர்வு செய்யப்பட்டதுடன், ஓட்டுனர்களும் அதிக மைலேஜை பெறும் வகையில் சில ஓட்டுதல் முறையைப் பின்பற்றினர். வானிலையும் சாதகமாக இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Skoda Peaq 90 EV SUV

பவர்ஃபுல் எலெக்ட்ரிக் கார்

இந்த புதிய சாதனைப் படைத்த ஸ்கோடா பீக் 90 எலெக்ட்ரிக் காரில் 91 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 86 kWh வரை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்புற சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும் இந்த மாடல் அதிகபட்சமாக 210 kW பவரை வெளிப்படுத்துகிறது.

மேலும், இந்த காரில் 19 அங்குல அலாய் வீல்கள் மற்றும் குறைந்த ரோலிங் ரெசிஸ்டென்ஸ் கொண்ட பிரத்யேக டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் drag coefficient வெறும் 0.249 என்பதால் சிறப்பான ஏரோடைனமிக்ஸை பெற்றுள்ளதாகவும் ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பீக் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஸ்கோடாவின் பெரிய மற்றும் அதிக இடவசதி கொண்ட 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு இருக்கைகள் மட்டுமின்றி, பனோரமிக் ரூஃப், bidirectional charging உள்ளிட்ட பல புதிய வசதிகளையும் இது கொண்டுள்ளது.

Article Published On: Friday, September 11, 2026, 16:11 [IST]
English summary
Skoda peaq 936 km range record seven seater electric suv
மேலும்... #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X