வர்ற மே மாசம் உச்சம் தொட போறது விஜய்யோ, ஸ்டாலினோ இல்ல! நாம யாருமே எதிர்பாக்காத ஒன்னு நடக்க போகுது!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான 'டிமாண்ட்' இருப்பதால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

இதற்கு ஸ்கோடா நிறுவனமும் விதிவிலக்கு அல்ல. செக் குடியரசு (Czech Republic) நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனமும், மற்ற பெரும்பாலான நிறுவனங்களை போலவே, சர்வதேச சந்தைகளில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

Skoda Peaq

இந்த வரிசையில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரக கார் ஒன்றை ஸ்கோடா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது 7 சீட்டர் கார் ஆகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பெயரை ஸ்கோடா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி ஸ்கோடா நிறுவனத்தின் இந்த 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காருக்கு ஸ்கோடா பீக் (Skoda Peaq) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம், ஸ்கோடா பீக் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Skoda Kylaq Grille

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின், இதுதான் ஸ்கோடா நிறுவனத்தின் முதன்மையான எலெக்ட்ரிக் காராக இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஸ்கோடா பீக் கார் விலை உயர்ந்ததாகவே இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஸ்கோடா பீக் கார் முதலில் சர்வதேச சந்தைகளில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஆனால் இந்திய சந்தைக்கு இந்த கார் வருமா? என்பது சந்தேகம்தான். இருப்பினும் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி கொண்டுதான் உள்ளது. ஸ்கோடா எல்ராக் (Skoda Elroq), ஸ்கோடா என்யாக் (Skoda Enyaq) மற்றும் ஸ்கோடா என்யாக் கூபே (Skoda Enyaq Coupe) ஆகிய எலெக்ட்ரிக் கார்களில் ஏதேனும் ஒன்று, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் ஸ்கோடா பீக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் தற்போதைய நிலையில் மிகவும் குறைவு என்றுதான் நாங்கள் கருதுகிறோம். ஸ்கோடா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு விஷன் 7எஸ் என்ற கான்செப்ட் (Vision 7S Concept) மாடலை காட்சிக்கு வைத்திருந்தது. அதன் தயாரிப்பு நிலை வெர்ஷன்தான், ஸ்கோடா பீக் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்கோடா நிறுவனம் சர்வதேச சந்தைகள் உடன் சேர்த்து, இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் சற்று விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வது அவசியம்.

இங்கே Peaq என்பதை Peak என்று உச்சரிக்க வேண்டும். உச்சம் என்ற பொருள் தரும் Peak என்ற ஆங்கில வார்த்தையில் இருந்துதான் Peaq என்ற பெயர் தருவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் முதன்மை மாடலாக இது இருக்க போகிறது என்பதால், இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் வசதிகள், செயல்திறன், டிசைன் மற்றும் இடவசதி என அனைத்திலும் உச்சமாக இருக்கும் என்பதை குறிக்கும் வகையிலும் இந்த பெயரை ஸ்கோடா நிறுவனம் சூட்டியுள்ளது.

பொதுவாக ஸ்கோடா நிறுவனத்தின் கார்களின் பெயர்கள் 'Q' என்ற ஆங்கில எழுத்துடன் முடிவடையும். இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இதன்படிதான் ஸ்கோடா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் காரின் பெயரும் 'Q' என்ற ஆங்கில எழுத்துடன் முடிவடையும் வகையில் Peaq என சூட்டியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 14, 2026, 14:35 [IST]
English summary
Skoda peaq electric suv launch soon check all details here
மேலும்... #skoda #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+