25 ஆண்டு வரலாற்றை ஒரே கார் அடித்து உடைத்தது! இத்தனை ஆயிரம் பேர் வாங்கிட்டாங்களா?
ஸ்கோடா இந்தியா நிறுவனம்இந்தியாவில் சொகுசு ரக வாகனங்களை தயார் செய்யும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு விற்பனை விபரங்கள் மற்றும் கடந்த டிசம்பர் மாத விற்பனை விபரங்களை தற்போது ெவளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட டபுள் மடங்கு வளர்ந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள விபரங்களின்படி கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் மொத்தம் 72,665 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு முழுவதும் வெறும் 35,166 கார்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 2024ம் ஆண்டை விட 2025ம் ஆண்டு விற்பனை டபுள் மடங்காகியுள்ளது.

இந்த 2025ம் ஆண்டு ஸ்கோடா நிறுவனம் இந்தியாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த அதிக விற்பனைக்கு முக்கியமான காரணம் ஸ்கோடா கைலாக் கார் தான். இந்த கார் கடந்தாண்டு சிறப்பாக விற்பனையாகும் காராக அந்நிறவனத்திற்கு மாறியது.
கடந்த 2025ம் ஆண்டு ஸ்கேடா இந்தியா நிறுவனத்திற்கு இந்தியா மறக்க முடியாத ஆண்டாக மாறியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இதற்கு இருக்கிறது. முக்கியமான காரணம் ஸ்கோடா நிறுவனம் 25 ஆண்டுகளை கடந்தது மட்டுமல்ல இந்த ஆண்டில் இதுவரை பெறாத அளவிற்கு அதிக விற்பனையை பெற்றுள்ளது.

இந்நிறுவனம் அதிகமாக விற்பனை செய்யும் கைலாக் காரை அந்நிறுவனம் இந்தியாவிற்கான 2.5 ஸ்டார்டர்ஜியாக கொண்டு வந்துள்ளது.இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து வேரியன்ட்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளது. இந்த காரின் ஃபிட் பினிஷ் சிறப்பாக உள்ளது.
இந்நிறுவனம் தொடர்ந்து குறைந்த விலையில் கார்களை அறிமுகப்படுத்தினால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும். இந்நிறுவனத்தின் பெயருக்கு இந்தியாவில் மதிப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலான இந்தியர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப வாகனம் இல்லாமல் இவர்களால் விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

கடந்த 2025ம் ஆண்டு ஸ்கேடா இந்தியா நிறுவனத்திற்கு இந்தியா மறக்க முடியாத ஆண்டாக மாறியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இதற்கு இருக்கிறது. முக்கியமான காரணம் ஸ்கோடா நிறுவனம் 25 ஆண்டுகளை கடந்தது மட்டுமல்ல இந்த ஆண்டில் இதுவரை பெறாத அளவிற்கு அதிக விற்பனையை பெற்றுள்ளது.
இந்நிறுவனம் அதிகமாக விற்பனை செய்யும் கைலாக் காரை அந் நிறுவனம் இந்தியா விற்கான 2.5 ஸ்டார்டர்ஜியாக கொண்டு வந்துள்ளது.இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து வேரியன்ட்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளது. இந்த காரின் ஃபிட் பினிஷ் சிறப்பாக உள்ளது.
இந்நிறுவனம் தொடர்ந்து குறைந்த விலையில் கார்களை அறிமுகப்படுத்தினால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும். இந்நிறுவனத்தின் பெயருக்கு இந்தியாவில் மதிப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலான இந்தியர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப வாகனம் இல்லாமல் இவர்களால் விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. இந்த விற்பனை நிச்சயம் அந்நிறுவனத்திற்கு நல்ல நம்பிக்கையை வழங்கியுள்ளது. இந்த 2026ம் ஆண்டு இந்நிறுவனம் சிறப்பான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

Click it and Unblock the Notifications