8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், மசாஜ் இருக்கைகள்... அறிமுகமானது புதிய ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்!!

இந்திய மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க தேர்வாக ஸ்கோடா ஸ்லாவியா கார் இருந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான விலை விபரம் வரும் அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிப்புற வடிவமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை. அதேநேரத்தில், புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது. புதிய பம்பர், ஏர்டேம் அமைப்பு, மறுவடிவமைப்புடன் கூடிய எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளன. பின்புறத்தில் புதிய எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. சில உயர்நிலை வேரியண்ட்டுகளில் அலை அலையாய் ஒளிரும் சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்களும் உள்ளன.

Slavia Monte Carlo

புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார் க்ளாசிக், க்ளாசிக் ப்ளஸ், சிக்னேச்சர், ஸ்போர்ட்லைட், ப்ரஸ்டீஜ், மான்ட்டி கார்லோ என ஆறு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு புதிய அலாய் சக்கரங்களும் வழங்கப்படுகின்றன. உயர்நிலை மாடலான மான்ட்டி கார்லோ வேரியண்ட்டில் 16 அங்குல கருப்பு அலாய் வீல்களுடன், சிவப்பு பிரேக் காலிப்பர்கள் ஸ்போர்ட்டியாக இருக்கிறது.

காரின் உட்புறத்தில் அதிக விஷயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பிரஸ்டீஜ் மற்றும் மான்ட்டி கார்லோ வேரியண்ட்டுகளில் 10.24 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் சிஸ்டம், 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, பின்புற இருக்கை பயணிகளுக்கு மசாஜ் செய்யும் வசதிகளும் உள்ளன.

New Slavia

சாதாரண வேரியண்ட்டுகளில் பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான இன்டீரியர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 360 டிகிரி கேமராவும் உள்ளது. 6 ஏர்பேக்குகள், சிங்கிள் பேன் சன்ரூஃப், கூல்டு க்ளவ்பாக்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், முன்புறத்தில் வென்டிலேட்டட் இருக்கை வசதி, ரியர் ஏசி வென்ட்டுகள், டைப் சி சார்ஜர்கள், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

புதிய ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் காரில் 116 எச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன.

Slavia Facelift

விலை உயர்ந்த ப்ரஸ்டீஜ் மற்றும் மான்ட்டி கார்லோ வேரியண்ட்டுகளில் மட்டும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளது. இந்த எஞ்சின் 150 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் கிடைக்கும்.

மொத்தத்தில் புதிய ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக இல்லாமல், முக்கிய மாற்றங்கள் செய்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பண்டிகை காலத்தில் புதிய மிட்சைஸ் செடான் கார் வாங்குவோருக்கு அதிக சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இந்த மாடல் முக்கிய தேர்வாக இருக்கும் என்று நம்பலாம். முக்கியமாக 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 360 டிகிரி கேமரா போன்றவை முக்கிய அம்சங்களாக வாடிக்கையாளர்களை கவரும்.

Article Corrections

This article has been updated with new set of images.
Article Published On: Wednesday, August 19, 2026, 9:32 [IST]
English summary
Skoda slavia facelift 2026 unveiled new features 8 speed automatic massage seat
மேலும்... #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X