நாளை அறிமுகமாகும் 3 முக்கிய கார், பைக் அறிமுகங்கள்: முழு விபரம்!

பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு புதிய மாடல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில், நாளை (அக்டோபர் 6) இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மற்றுமொரு முக்கியமான நாளாக அமைய உள்ளது. அதன்படி, ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்லாவியா செடான் காரும், ஹோண்டா நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட எலிவேட் எஸ்யூவியும் நாளை அறிமுகம் செய்ய உள்ளன. இதுதவிர, டிரையம்ப் நிறுவனத்தின் நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களை உலகளவில் வெளியிடப்பட உள்ளன.

பண்டிகைக் கால விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், இந்த மூன்று நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. குறிப்பாக ஸ்லாவியா மற்றும் எலிவேட் மாடல்களில் வடிவமைப்பு, வசதிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் இடம்பெற உள்ளன. டிரையம்ப் வெளியிடும் புதிய பைக்குகளில் இந்தியாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் முக்கியமான மாடல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

Skoda Slavia Facelift

ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட ஸ்லாவியா செடானை நாளை அக்டோபர் 6-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய ஸ்லாவியா காரில் வெளிப்புற வடிவமைப்பு மட்டுமின்றி, உட்புற வசதிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விளக்குகள், பம்பர், கிரில் மற்றும் அலாய் சக்கர வடிவமைப்புகள் இடம்பெற உள்ளன.

Also Read

புதிய ஸ்லாவியாவின் கேபினில் 360 டிகிரி கேமரா, புதிய தகவல் பொழுதுபோக்கு அமைப்பு, வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட வசதிகள் கிடைக்க உள்ளன. பின்புற இருக்கைகளில் மசாஜ் வசதியும் வழங்கப்பட உள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் தொடரும் நிலையில், 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.

Honda Elevate Facelift

ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எலிவேட் எஸ்யூவியை நாளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய எலிவேட் எஸ்யூவிக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஹோண்டா வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்திய சந்தையில்தான் இந்த புதிய எலிவேட் கார் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மிட்சைஸ் எஸ்யூவி வாங்க இருப்போரின் தேர்வில் இந்த காரும் இருப்பதால், இந்த புதிய மாடல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read

புதிய எலிவேட் எஸ்யூவியில் முன்பக்க கிரில், முகப்பு விளக்குகள் மற்றும் பம்பர் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. உட்புறத்திலும் புதிய வசதிகள் சேர்க்கப்பட உள்ளன. குறிப்பாக 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. தற்போதைய எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் தொடரும்.

Bonneville T100

(Representational Image - Bonneville T100)

புதிய டிரையம்ப் பைக்குகள்

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனமும் நாளை அக்டோபர் 6-ம் தேதி நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களை உலகளவில் வெளியிட உள்ளது. இதில் புதிய போன்வில் 400 மீது இந்திய பைக் ரசிகர்களின் கவனம் அதிகமாகியுள்ளது. டிரையம்ப் நிறுவனத்தின் பழமையான கிளாசிக் வடிவமைப்புடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட மாடலாக இது இருக்கும்.

போன்வில் 400 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, புல்லட் 350 மற்றும் ஹோண்டா CB350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இருப்பினும், நாளைய நிகழ்வு உலகளாவிய வெளியீடாக இருப்பதால், இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போதே உறுதியாகக் கூற முடியாது. டிரையம்ப் நாளை முழு விவரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Monday, October 5, 2026, 10:36 [IST]
English summary
Skoda slavia facelift honda elevate facelift triumph bonneville 400 launch october 6 2026
மேலும்... #skoda #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X