ரூ.9.99 லட்சத்தில் புதிய ஸ்கோடா ஸ்லாவியா அறிமுகம்: என்னென்ன புதுசு?

இந்திய சந்தையில் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ஸ்லாவியா கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதமே இந்தியாவில் பொதுபார்வைக்கு கொண்டு வரப்பட்டாலும் இன்று முறைப்படி விலை அறிவிப்ப்புடன் சந்தைக்கு வந்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.9.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த வாரம் முதல் டெலிவரிப் பணிகள் துவங்கப்பட உள்ளது.

Skoda Slavia Facelift

புதிய ஸ்லாவியா கார் கிளாசிக், கிளாசிக் பிளஸ், சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், பிரஸ்டீஜ் மற்றும் மான்ட்டி கார்லோ என ஆறு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதில், 1.0 TSI பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் தேர்வுகளும், 1.5 TSI எஞ்சினுடன் 7 ஸ்பீடு DSG தேர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Also Read

புதிய ஸ்கோடா ஸ்லாவியா காரின் முன்புறமும், பின்புறத்திலும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், பின்புறத்தில் சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள், புதிய அலாய் வீல்கள் என மாற்றங்கள் கண்டுள்ளது. Monte Carlo வேரியண்ட்டில் கருப்பு நிற வெளிப்புற அலங்காரங்களும் சிவப்பு நிற சிறப்பு நிற ஹைலட்டுகளுடன் தோற்றத்தில் கூடுதல் கவர்ச்சியை பெறுகிறது.

Skoda Slavia Facelift

ஏற்கனவே இருந்த அதே பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் மாற்றம் இல்லாவிட்டாலும், கியர்பாக்ஸ் பிரிவில் முக்கியமான மாற்றம் வந்துள்ளது. 1.0 TSI பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, புதிதாக 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் தேர்வும் கிடைக்கிறது. இதன் மூலம் ஆட்டோமேட்டிக் செடான் வாங்க விரும்புபவர்களுக்கு ஸ்லாவியா கூடுதல் தேர்வை வழங்குகிறது.

அடுத்து 1.5 TSI எஞ்சினை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் தேர்வு Prestige மற்றும் Monte Carlo வேரியண்ட்டுகளில் மட்டும் கிடைக்கிறது. மேலும், 1.5 TSI வேரியண்ட்டுகளில் பின்புற டிஸ்க் பிரேக்குகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் அதிக செயல்திறன் கொண்ட பதிப்புகளுக்கு கூடுதல் பிரேக்கிங் திறன் கிடைக்கிறது.

Also Read

இதில், 1.0 லிட்டர் TSI எஞ்சின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும் 178 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அதிக செயல்திறன் விரும்புபவர்களுக்கு வழங்கப்படும் 1.5 லிட்டர் TSI பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 எச்பி பவருடன் 250 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

புதிய ஸ்லாவியாவில் கேபின் வசதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பின்புற இருக்கையில் மசாஜ் செய்யும் வசதி இந்த பிரிவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது. இதனுடன் 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், உயர்நிலை வேரியண்ட்டுகளில் பெரிய டிஜிட்டல் காக்பிட் திரை ஆகியவையும் கிடைக்கின்றன.

Skoda Slavia Facelift

தொழில்நுட்ப அம்சங்களிலும் புதிய ஸ்லாவியா கவனம் பெற்றுள்ளது. 25.6 செ.மீ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகள் உள்ளன. Google Cloud அடிப்படையிலான AI Assistant மூலமாக குரல் கட்டளைகளை பயன்படுத்தி இசை, அழைப்புகள் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற வசதிகளை இயக்க முடியும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, அனைத்து வேரியண்ட்டுகளிலும் 6 ஏர்பேக்குகள் உட்பட 25-க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. உயர்நிலை வேரியண்ட்களில் 40-க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஏற்கெனவே பெற்றுள்ள 5 நட்சத்திர Global NCAP பாதுகாப்புத் தரத்தையும் புதிய ஸ்லாவியா தொடர்ந்து கொண்டுள்ளது.

புதிய ஸ்கோடா ஸ்லாவியா காரின் அடிப்படை விலையிலான கிளாசிக் 1.0 TSI மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.9.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கிளாசிக் பிளஸ் வேரியண்ட்டிற்கு ரூ.10.99 லட்சமும், சிக்னேச்சர் வேரியண்ட்டிற்கு ரூ.13.94 லட்சமும், ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டிற்கு ரூ.14.34 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பவர்ஃபுல் எஞ்சின் தேர்வான பிரஸ்டீஜ் 1.5 TSI எஞ்சின் DSG ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.18.59 லட்சமும், மான்ட்டி கார்லோ 1.5 TSI எஞ்சின் DSG ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ.18.84 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Tuesday, October 6, 2026, 12:50 [IST]
English summary
Skoda slavia new facelift 2026 launched india price features specs
மேலும்... #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X