இந்தியா வந்த புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார்... 40 கி.மீ மைலேஜ் தருமா? உண்மை இதுதான்!!

புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஸ்கோடா சூப்பர்ப் பிரீமியம் செடான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டீசல் எஞ்சினுடன் இந்த கார் வர இருப்பது முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

நான்காம் தலைமுறை கண்டுள்ள இந்த புதிய மாடல் வரும் 2027ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், வரும் ஆண்டு ஆண்டு இரண்டாவது காலாண்டு காலத்தில் புக்கிங் செய்பவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Skoda Superb Unveiled India

எஞ்சின்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சூப்பர்ப் செடான் காரில் 2.0 லிட்டர் TDI டீசல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 150 பிஎஸ் பவரையும் 360 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது.

40 கி.மீ மைலேஜ் கிடைக்குமா?

புதிய சூப்பர்ப் செடான் கார் குறித்து இணையத்தில் லிட்டருக்கு 40 கி.மீ மைலேஜ் தரும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்தியாவுக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள மாடலில் ஹைப்ரிட் தேர்வு இல்லை என்பதால் இந்த மைலேஜ் விபரங்கள் சரியானதாக இருக்காது.

பிரீமியம் வசதிகள்

இந்தியாவில் சூப்பர்ப் காரின் எல் அண்ட் கே என்ற வேரியண்ட்டில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்கள் இடம்பெறுகின்றன. உட்புறத்தில் 12.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை, 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கேன்ட்டன் பிரிமீயம் ஆடியோ சிஸ்டம், 3-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹீட்டிங் வசதி, மசாஜ் இருக்கை வசதிகள் உள்ளன.

இந்த கார் 4,912மிமீ நீளமும், 1,849மிமீ அகலமும், 1,511மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இதன் வீல்பேஸ் நீளம் 2,841மிமீ ஆக உள்ளது. இதனால், இந்த காரின் உட்புறத்தில் மிக தாராளமான இடவசதியை அளிக்கிறது. இந்த காரி்ல 18 அங்குல அலாய் வீல்கள் உள்ளன. 10 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

எதிர்பார்க்கும் விலை

இந்தியாவில் சூப்பர்ப் கார் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சுமார் ரூ.50-60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைலேஜ்?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூப்பர்ப் காரில் ஹைப்ரிட் மாடல் இல்லை என்பதால், 40 கி.மீ மைலேஜ் தரும் என்ற கணக்கீட்டின்படி இந்த காரை எதிர்பார்க்க பார்க்க வேண்டாம். தற்போது டீசல் மாடலில் மட்டுமே வந்துள்ளது.

டீசல் மைலேஜ்

இந்தியாவுக்கு வரும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலின் சர்வதேச தரவுகளை வைத்து பார்க்கும்போது சுமார் லிட்டருக்கு 20 கி.மீ அளவிலான மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கார் பிரீமியம் செடான் பிரிவில், டீசல் இன்ஜின் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆகியவை இணைந்திருப்பது இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

அதிக இடவசதியுடன் பிரிமீயம் அம்சங்கள், நம்பிக்கையான டீசல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

Article Published On: Wednesday, August 19, 2026, 10:16 [IST]
English summary
Skoda superb 2026 india unveiled features specs
மேலும்... #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out