இதுவரை இல்லாத விற்பனை! இந்தியர்களை ஆட்கொண்ட 2 பிராண்டுகள்!
இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக அந்நிறவனம் தெரிவித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வாகனங்களை தயாரித்து வரும் நிலையில் இந்த விற்பனை சாதனையை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த 2025ம் ஆண்டு ஸ்கேடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் ரூ1,17,000 வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024ம் ஆணஅடு நடந்த விற்பனையை ஒப்பிடும் போது 36 சதவீதம் வளர்ச்சியாகும்.

இந்த வளர்ச்சிக்கு மார்கெட் விரிவடைந்தது, காம்பேக்ட் மற்றும் மிட் சைஸ் செக்மெண்ட் வளர்ச்சியடைந்தது முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த நிறுவனம் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் பிராண்டின் கீழ் கடந்த 2025ம் ஆண்டு மட்டும் மொத்தம் 1,59,500 வாகனங்களை உள்ளூரிலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியிலும் விற்பனை செய்துள்ளதாக பதிவு செய்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் எம்க்யூபி ஏ0 இன் ஆர்க்கிடெக்ஷர் தான். இந்த பிளாட்ஃபார்மம் இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் இங்குள்ள கண்டிஷன்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. இந்த பிளாட்ஃபார்மில் தான் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா பிராண்டின் கீழ் டைகுன், விர்டுஸ், குஷாக், ஸ்லாவியா, கைலாக் ஆகிய கார்கள் எல்லாம் இ்நதியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.
2025ம் ஆண்டின் முக்கிய ஹைலைட் கைலாக் கார் தான் இந்த கார் அந்த பிராண்டின் கீழ் வரும் முதல் 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார் ஆகும். அடுத்தாக இந்த குழுமம் கடந்தாண்டு தான் இந்தியாவில் தனது 20 லட்சமாவது காரை தயாரித்த மைல் கல்லை பதித்தது. இது மட்டுமல்ல இந்நிறுவனம் இந்தியாவில் தயாரித்த 7,15,000 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதியும் செய்துள்ளது. இந்த கார்கள் அரபு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மொத்த விற்பனையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் கார் 38 சதவீத பங்கை வைத்துள்ளது. அந்நிறுவனத்தி்ன கோல்ஃப் ஜிடிஐ காருக்க நல்ல டிமாண்ட் இருக்கிறது. இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. விரைவில் இது டெலிவரி செய்யப்படும். அடுத்தாக கடந்தாண்டு ஸ்கோடாவின் வளர்ச்சி 107 சதவீதமாக இருந்துள்ளது.இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் எம்க்யூபி ஏ0 இன் ஆர்க்கிடெக்ஷர் தான். இந்த பிளாட்ஃபார்மம் இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் இங்குள்ள கண்டிஷன்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. இந்த பிளாட்ஃபார்மில் தான் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா பிராண்டின் கீழ் டைகுன், விர்டுஸ், குஷாக், ஸ்லாவியா, கைலாக் ஆகிய கார்கள் எல்லாம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த கார்கள் இந்தியாவிலும் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளன. இந்த கார்கள் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடாவின் கைலாக் காருக்கு நல்ல டிமாண்ட் ஏற்றபட்டுள்ளது. இது போக ஆக்டவியா ஆர்எஸ் கார் இறக்குமதி செய்யப்படுவது நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த பிராண்டின் கீழ் கார்கள் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறுது. உள்நாட்டு விற்பனையில் இந்நிறுவனம் இந்தாண்டும் நல்ல வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








