இந்த 'குட்டி' எலெக்ட்ரிக் காரை பைக் மாதிரி வீட்டுக்கு ஒன்னு வாங்கிப் போடலாம்!

சிறிய ரக கார்களுக்கு எப்போதுமே உலகளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது (இந்தியாவில் இல்லை). மிகவும் குறைவான விலையில் போதுமான பயன்பாட்டு அம்சங்களுடன் அந்த வகையிலான கார்கள வெளியிடப்படுவது ஒரு முக்கிய காரணம். இந்தியாவில் அப்படியான ஒரு காராகத் தான் டாடா நானோ வெளியானது. ஆனால் விரைவிலேயே இந்தியாவில் அந்தக் கார் தோல்வியையும் தழுவியது.

ஆனால் தற்போது நானோவை விட குட்டியான கார் ஒன்று சந்தையில் விற்பனையில் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா. எம்ஜியின் காமெட் EV, நானோவை விட குட்டியான கார் தான். ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் கார் காமெட் EV-யை விட குட்டியான ஒன்று. அது வேறெதுவும் இல்லை, 'மைக்ரோலினோ' (Microlino) என்ற எலெக்ட்ரிக் கார் தான்.

Microlino

ஐரோப்பாவைச் சேர்ந்த மைக்ரோ என்ற நிறுவனம் தான் இந்தக் குட்டியான எலெக்ட்ரிக் காரை ஐரோப்பாவெங்கும் விற்பனை செய்து வருகிறது. இந்தக் காரின் நீளம் 2,519 மிமீ தான். மஹிந்திரா XUV 7XO-வில் பாதி என வைத்துக் கொள்ளலாம். அகலம் 1,473 மிமீ மற்றும் உயரம் 1,501 மிமீ மட்டுமே.

இரண்டு பேர் மட்டும் அருகருகே அமர முடிகிற வகையிலான இந்த எலெக்ட்ரிக் காரின் கதவு முன்பக்கம் இருக்கிறது. ஆம், வழக்கமாக கார்களின் கதவுகள் பக்கவாட்டில் தானே இருக்கும். இந்தக் காரில் கதவு முன்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். கதவைத் திறக்கும் போது ஸ்டீயரிங் வீலும் கதவுடனேயே சேர்ந்து நீளும். பார்ப்பதற்கே மிகவும் விசித்திரமான காட்சியாக இது இருக்கும்.

Microlino

இரண்டு பேர் அமர்வதுடன், சீட்டிற்குப் பின்பு 230 லிட்டர் பூட் ஸ்பேஸும் இந்தக் காரில் இருக்கும். அது நம்முடைய பொருட்களை வைத்திருக்கத் தேவையான இடவசதியைக் கொண்டிருக்கும். இந்தக் காரில் இருக்கும் இன்னொரு சிறப்பான அம்சம், இதன் ரூஃப் டாப்பை சன்ரூஃப் போல திறந்து கொள்ள முடியும் என்பது தான். ஃபன்னாகவும், பிராக்டிகலாகவும் ஒரு கார் வேண்டுமா? இந்த மைக்ரோலினோ இவியை வாங்கலாம்.

இந்தக் காரில் 17 hp பவர் மற்றும் 17.9 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் காரின் பின்பக்க வீல்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்தக் காரில் 15 kWh NCA (நிக்கல் கோபால்ட் அலுமினியம்) பேட்டரி பேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பவர்ட்ரெயின் செட்டப்பானது 228 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுப்பதுடன், அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையும் கொடுக்கிறது. 2.2 kW டைப் 2 AC சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 0-80 சதவீதம் வரை 5.5 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். இதிலேயே இன்னும் குறைவான வேகத்தில் செல்லக்கூடிய விலை குறைவான மைல்ரோலினோ வேரியன்ட்களும் விற்பனையில் இருக்கின்றன.

இந்தக் காரில் எல்லாமே சிறியது தான், விலையைத் தவிர. இந்திய மதிப்பிற்கு 18 லட்சம் ரூபாய் முதல் 29 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்தக் கார் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐரோப்பாவைத் தொடர்ந்து ஆசியாவில், முதல் நாடாக மலேசியாவில் இந்தக் காரைக் காட்சிப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்தக் கார் இந்தியாவிற்கு வரும் வாய்ப்புகள் குறைவு தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

இது போன்ற சிறிய ரக கார்கள், பைக்குகளின் விலையில் கிடைத்தால், குறிப்பாக 2 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் கிடைத்தால் நன்றாக இருக்கும். அப்படி இருந்தாலும் இந்திய வாடிக்கையாளர்கள் வாங்குவார்களா என்பது சந்தேகம்தான். மேலும், 3.50 லட்சம் ரூபாய்க்கே மாருதியின் ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட முறையான கார்களே இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் போது. இது போன்ற சிறிய ரக கார்களுக்கான தேவை இந்தியாவில் இல்லை என்றும் கூறலாம்.

Article Published On: Tuesday, June 30, 2026, 14:58 [IST]
English summary
Smallest ev car microlino features price and other details
மேலும்... #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out