இந்தியாவில் ரூ.4,000 கோடி முதலீடு... ஜீப், சிட்ரோன் பிராண்டில் 12 புதிய கார்கள் அறிமுகம்!

இந்திய கார் சந்தையில் தனது வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், ஸ்டெல்லான்டிஸ் (Stellantis) நிறுவனம் ரூ.4,000 கோடி கூடுதல் முதலீட்டை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜீப் (Jeep), சிட்ரோன் (Citroën) ஆகிய பிராண்டுகளின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 12 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபாஸ்ட்லேன் 2030 (FaSTLAne 2030) என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.11,000 கோடி முதலீட்டுடன் சேர்த்து, கூடுதலாக ரூ.4,000 கோடி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக இந்தியாவில் அந்நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.15,000 கோடியாக உயரும். புதிய மாடல்கள் மூலம் இந்திய சந்தையில் தனது விற்பனையை அதிகரிப்பதுடன், ஏற்றுமதியையும் விரிவுபடுத்தவும் ஸ்டெல்லான்டிஸ் திட்டமிட்டுள்ளது.

Citroen Car

12 புதிய மாடல்கள்

இந்த புதிய முதலீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 12 புதிய கார் மாடல்கள் ஜீப் மற்றும் சிட்ரோன் பிராண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் ஏழு முற்றிலும் புதிய மாடல்களாகவும், ஐந்து ஏற்கெனவே விற்பனையில் உள்ள மாடல்களின் முக்கிய மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாகவும் இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் முதல் கார் மாடல் வரும் 2027ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த 12 வாகனங்களில் ஐந்து மாடல்கள் ஜீப் பிராண்டின் கீழும், ஏழு மாடல்கள் சிட்ரோன் பிராண்டின் கீழும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. புதிய தயாரிப்புகளின் பெயர்கள், விலை மற்றும் முழுமையான தொழில்நுட்ப விவரங்களை ஸ்டெல்லான்டிஸ் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் பல்வேறு ரகங்களில் வருவது உறுதியாகி இருக்கிறது.

Jeep Wrangler Rubicon Whitecap Edition

புதிய தயாரிப்புத் திட்டத்தின் கீழ் எஸ்யூவி (SUV) கார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. பி, சி மற்றும் டி பிரிவுகளைச் சேர்ந்த எஸ்யூவி மாடல்களுடன், பல்முனை பயன்பாட்டு வகை கார் (MPV), சிறிய ஏ பிரிவு கார் மற்றும் பிரீமியம் பிக்கப் டிரக் ஆகியவையும் இடம்பெற உள்ளன.

இதன் மூலம் இந்தியாவில் தற்போது குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளையே அதிகம் சார்ந்திருக்கும் ஜீப், சிட்ரோன் நிறுவனங்கள் தங்களது விற்பனை வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும். குறிப்பாக, அதிக போட்டி நிலவும் எஸ்யூவி சந்தையில் புதிய மாடல்கள் அறிமுகமாவது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்கும்.

Also Read

எரிபொருள் தேர்வு

எதிர்கால வாகனங்களில் பல்வேறு எரிசக்தித் தொழில்நுட்பங்களை வழங்க ஸ்டெல்லான்டிஸ் திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட வழக்கமான எஞ்சின் தேர்வுகளுடன், ஹைபிரிட் (Hybrid), பிளக்-இன் ஹைபிரிட் (PHEV), முழுமையான மின்சார வாகனங்கள் (BEV) ஆகிய தொழில்நுட்பங்களும் பரிசீலனையில் உள்ளன.

எந்த மாடலில் எந்தத் தொழில்நுட்பம் இடம்பெறும் என்பது வாடிக்கையாளர் தேவை, விலை நிர்ணயம் மற்றும் மின்சார வாகனக் கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். இதனால், இந்திய சந்தையின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப புதிய கார்களை உருவாக்க அந்நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

Also Read

ஏற்றுமதிக்கும் முக்கியத்துவம்

புதிய முதலீட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக, உள்நாட்டு உதிரிபாகப் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடனான தொழில்நுட்ப மற்றும் உற்பத்திக்கான விஷயங்களை ஸ்டெல்லான்டிஸ் பயன்படுத்த உள்ளது. இதன் மூலம் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தவும், இந்தியாவுக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து சுமார் 50 நாடுகளுக்கு வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்படும் எஞ்சின்கள் மற்றும் கியர்பாக்ஸ்களில் சுமார் 95 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தப் புதிய திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவில் ஜீப், சிட்ரோன் பிராண்டுகளின் தயாரிப்பு வரிசை விரிவடைவதுடன், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கும் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். புதிய மாடல்களின் விலை மற்றும் அறிமுக விவரங்கள் வெளியாகும்போது, இந்திய கார் சந்தையில் அவற்றின் தாக்கம் மேலும் தெளிவாகும்.

அண்மையில் சென்னை அருகே திருவள்ளூரில் செயல்பட்டு வரும் கார் ஆலையின் முழு உரிமையையும் ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் கைப்பற்றியது. அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இதன்மூலமாக டாடா கார்களின் அடிப்படையில் புதிய மாடல்கள் ஜீப் பிராண்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, October 16, 2026, 13:12 [IST]
English summary
Stellantis rs 4000 crore investment india jeep citroen 12 new cars 2030
மேலும்... #jeep #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out