சிட்ரோன் கார் உற்பத்தி அதிகரிக்கிறது... திருவள்ளூர் ஆலையை முழுதாக கைப்பற்றிய ஸ்டெல்லாண்டிஸ்!!

இந்திய வாகன சந்தையில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் ஸ்டெல்லாண்டிஸ் வாகன குழுமம் மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. . சென்னை அருகே திருவள்ளூரில் அமைந்துள்ள பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையின் முழு பங்குகளையும் வாங்கி, அதன் தனி உரிமையாளராக மாறியுள்ளது. இந்த ஆலையை மையமாகக் கொண்டு தனது உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த திருவள்ளூர் உற்பத்தி ஆலை தொடக்கத்தில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தது. இந்திய சாலைகளை பல தசாப்தங்களாக ஆட்சி செய்த அம்பாசிடர் கார்கள் இங்கு தயாரிக்கப்பட்டன. அம்பாசிடருக்கு மார்க்கெட் போனதால், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூட்டணி முறையில் இங்கு கார்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. மிட்சுபிஷி உள்ளிட்ட நிறுவனங்களின் வாகனங்கள் இங்குதான் தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது ஸ்டெல்லாண்டிஸ் குழுமத்தின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்துள்ளது.

Citroen Car

சிகே பிர்லா குழுமத்துடன் கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வந்த இந்த ஆலையின் 100 சதவீத பங்குகளையும் தற்போது ஸ்டெல்லாண்டிஸ் தன்வசப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆலை மேலாண்மை, தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் எதிர்கால முதலீட்டு முடிவுகளை எடுப்பதில் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்திற்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. இது இந்திய சந்தையில் நீண்டகால அடிப்படையில் திட்டங்களுக்கான அடிப்படையாக அமையும்.

Also Read

ஆலையை முழுமையாகக் கைப்பற்றிய கையோடு, உற்பத்தியை 160 சதவீதம் வரை உயர்த்த ஸ்டெல்லாண்டிஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. 2027 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்டுவதற்கும், ஆண்டுக்கு 1.3 லட்சம் வாகனங்களை இங்கு தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தை தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Citroen Car Plant Tiruvallur

தற்போது இந்த திருவள்ளூர் ஆலையில் ஸ்டெல்லாண்டிஸ் கீழ் செயல்பட்டு வரும் சிட்ரோன் நிறுவனத்தின் C3, C3 ஏர்கிராஸ், eC3 மற்றும் பாசால்ட் ஆகிய கார் மாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, இங்கு தயாராகும் ஸ்மார்ட் கார் பிளாட்ஃபார்ம் மாடல்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. முழுமையான உரிமை கிடைத்துள்ளதால், இனி உற்பத்தி வேகமெடுக்கும் என்பதுடன் தரக் கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

இந்த ஆலை மட்டுமின்றி, ஓசூரில் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்தின் எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், உள்நாட்டு உதிரிபாகங்களுடன் சிட்ரோன் கார்களை உற்பத்தி செய்யவும், கார்களின் தயாரிப்பு செலவு குறைவதுடன், வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் வாகனங்களை வழங்க முடியும். மேலும் உதிரிபாகங்கள் எளிதில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு பராமரிப்புச் செலவுகளும் குறைய வாய்ப்புள்ளது.

Also Read

தமிழகத்தில் வாகன உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், இந்த முதலீடு கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அம்பாசிடர் காலம் தொட்டே சிறந்த வாகன தயாரிப்பு மையமாக திகழும் திருவள்ளூர், ஸ்டெல்லாண்டிஸ் மூலமாக அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் ஜீப், லீப் உள்ளிட்ட தனது இதர கார் பிராண்டுகளின் தயாரிப்புகளையும் இங்கு வைத்து தயாரிக்கவும், உள்நாட்டு சந்தை தேவையை பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஸ்டெலாண்டிஸ் நிறுவனத்திற்கு வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Monday, September 21, 2026, 16:43 [IST]
English summary
Stellantis thiruvallur plant full ownership production 160 percent ramp up plan 2027
மேலும்... #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out