சீன நிறுவனங்களால் நெருக்கடி... 24 மாதங்களில் புதிய கார்களை உருவாக்க சுஸுகி அதிரடி திட்டம்!!

சர்வதேச வாகனச் சந்தையில் முன்னணி இடத்தை வகிக்கும் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், தனது புதிய கார்களை உருவாக்கும் கால அளவை பாதியாகக் குறைக்க அதிரடித் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. சுஸுகி நிறுவனத்தின் 'டெக்னாலஜி ஸ்ட்ராடஜி 2026' என்ற வர்த்தக கொள்கை குறித்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை சுஸுகி எடுத்துள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் கார் தயாரிப்பு, விற்பனை உள்ளிட்டவற்றில் பல அதிரடி முடிவுகளையும் வகுத்துள்ளது. அதில், ஒன்றாக புதிய காரை உருவாக்கும் காரலத்தை 4 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்க திட்டமிட்டுள்ளது. உலகளாவிய சந்தையில் சீன கார் தயாரிப்பு நிறுவனங்கள் காட்டி வரும் அதிவேக வளர்ச்சியும், குறுகிய காலத்தில் புதிய கார்களை சந்தைக்குக் கொண்டு வரும் திறனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுஸுகி நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுஸுகி ஒப்புக்கொண்டுள்ளார்.

Maruti Swift

சீன நிறுவனங்களின் அசுர வேகம்

பிஒய்டி (BYD), லீப் மோட்டார் (Leapmotor) மற்றும் ஷியோமி (Xiaomi) போன்ற சீன நிறுவனங்கள், மென்பொருள் சார்ந்த வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த காலத்தில் புதிய எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் கார்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அவர்களின் இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்காவிட்டால், எதிர்காலத்தில் சந்தைப் பங்கை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்து கொண்டு இந்த 24 மாத திட்டத்தை சுஸுகி அறிவித்துள்ளது.

Also Read

பாரம்பரிய முறையில் ஒரு வாகனத்தை வடிவமைக்கும்போது வடிவமைப்பு, பொறியியல், தரக் கட்டுப்பாடு மற்றும் உதிரிபாகக் கொள்முதல் ஆகியப் பணிகள் ஒன்றன்பின் ஒன்றாகவே நடைபெறும். ஆனால் சுஸுகி இனி 'இணையான மேம்பாடு' (Concurrent Development) என்ற முறையைப் பின்பற்ற உள்ளது. இதன் மூலம் அனைத்துத் துறைகளும் ஒரே நேரத்தில் இணைந்து பணியாற்றும். இதனால் எந்தவொரு கட்டத்திலும் தாமதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம்

மேலும், கணினி அடிப்படையிலான உருவகப்படுத்துதல் (Digital Engineering Simulation) மற்றும் மாடுலர் கட்டமைப்புகளை பயன்படுத்துவதன் மூலம், கார்களின் பாகங்களை மீண்டும் மீண்டும் புதிதாக வடிவமைக்கும் தேவை குறையும். இதன் விளைவாக, காரின் உருவாக்கத் திறனை 30 சதவீதமும், தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை 50 சதவீதமும் உயர்த்த சுஸுகி திட்டமிட்டுள்ளது.

Also Read

சுஸுகி நிறுவனத்தின் இந்த உலகளாவிய திட்டத்தில் இந்திய சந்தை மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவில் இயங்கி வரும் மாருதி சுஸுகி, வரும் 2030 நிதியாண்டுக்குள் தனது ஆண்டு உற்பத்தித் திறனை 40 லட்சம் யூனிட்டுகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 36 மாதங்களில் புதிய கார்களை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வரும் மாருதிக்கு, அதன் தாய் நிறுவனமான சுஸுகியின் இந்த 24 மாத இலக்கு மேலும் வேகத்தை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களுக்கு என்ன பலன்?

காரை உருவாக்கும் காலம் 2 ஆண்டுகளாக குறையும்போது, இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய மாடல்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்று எரிபொருள் அமைப்புகள் (பெட்ரோல், சிஎன்ஜி, ஹைபிரிட் மற்றும் மின்சாரம்) மிக விரைவாகச் சந்தைக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இந்தியச் சந்தையில் டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் புதுப்புது மாடல்களை வேகமாகக் களம் இறக்கி வரும் சூழலில், சுஸுகி நிறுவனத்தின் இந்த 24 மாதங்களில் புதிய கார் தயாரிப்பு திட்டம் மாருதி சுஸுகிக்கு சந்தையில் மிகப் பெரிய பலத்தைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Monday, September 28, 2026, 11:15 [IST]
English summary
Suzuki 24 months new car development plan chinese automakers pressure maruti india
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out