மாருதி பிரியர்கள் கவனிக்க... கார்களின் எடையை 100 கிலோ குறைக்க சுஸுகி முடிவு... பாதுகாப்பில் சமரசம் இல்லையாம்!

இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களைப் பற்றிய விவாதம் என்றாலே விலை, மைலேஜ் மட்டுமல்லாமல் பாதுகாப்பும் தரம் குறித்து தவறாமல் பேசப்படும் விஷயமாகிவிட்டது. சில மாருதி மாடல்களின் பாதுகாப்பு செயல்திறன் குறித்து கடந்த காலங்களில் எழுந்த விவாதங்களால், அந்த நிறுவனத்தின் கார்களைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பிம்பமும் இந்திய வாடிக்கையாளர்களிடம் உருவாகியுள்ளது. இப்படியான சூழலில், கார்களின் எடையை 100 கிலோ வரை குறைக்க மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி திட்டமிட்டு உள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் தனது கார்களின் எடையை கணிசமாக குறைக்க புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகளை உருவாக்கி வருகிறது ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார் நிறுவனம். இதன்படி, காரின் எடையை 100 கிலோ வரை குறைப்பதே முக்கிய இலக்காக வைத்துள்ளது. ஆனால் எடையை குறைப்பதற்காக பாதுகாப்பு தரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

Maruti S Presso

பொதுவாக காரின் எடையை குறைப்பது எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்திறனுக்கு சாதகமான விஷயமாக இருக்கிறது. கார் எடை குறைந்தால் எஞ்சினுக்கு சுமை குறையும் என்பதால், மைலேஜ் மேம்படும் என்பதுடன் சற்று கூடுதல் பவரை வெளிப்படுத்தும். மின்சார கார்களிலும் பேட்டரியின் மின் ஆற்றல் பயன்பாடு சற்று குறைந்த அதிக தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பும் உருவாகும்.

அதேசமயத்தில், எடை குறைப்பு காரணமாக கட்டமைப்பு தரம் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த கேள்வியை மனதில் வைத்து, சுஸுகி நிறுவனம் விளக்கத்தை முன்வைத்துள்ளது. அதன்படி, காரின் கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் உலோகங்கள் மற்றும் உதிரிபாகங்களின் எடையை குறைப்பது மட்டும் இந்த திட்டத்தின் நோக்கமல்ல.

Also Read

விபத்தின் போது காரின் முன்பகுதி எவ்வாறு சிதைந்து தாக்கத்தை உள்வாங்க வேண்டும், பயணிகள் அமரும் பகுதி எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த கட்டமைப்பையே மறுபரிசீலனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விபத்தில் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காரின் முன்பகுதியில் இருக்கும் இடத்தை சிறப்பாக பயன்படுத்துவது போன்ற வழிகளையும் சுஸுகி ஆய்வு செய்து வருகிறது. எஞ்சின் அமைப்பில் மாற்றம் செய்வது, கட்டமைப்பில் பயன்படும் பாகங்களின் எடையை குறைப்பது மற்றும் ஒவ்வொரு உதிரிபாகத்தையும் மறுவடிவமைப்பது போன்ற முயற்சிகள் மூலம் ஒட்டுமொத்த காரின் எடையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read

இதற்காக சுஸுகி ஏற்கனவே பயன்படுத்தி வரும் இலகுவான வாகன கட்டமைப்பு தொழில்நுட்பங்களும் அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளன. ஒரு குறிப்பிட்ட உதிரிபாகத்தில் மட்டும் அதிக எடையை குறைப்பதற்கு பதிலாக, காரின் பல்வேறு பாகங்களில் எடையை குறைத்து ஒட்டுமொத்தமாக பெரிய அளவிலான எடை குறைப்பை அடைவதே நிறுவனத்தின் இலக்காக உள்ளது.

தற்போதைய தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் 80 கிலோ வரை எடையை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதை சுஸுகி கண்டறிந்துள்ளது. இதை மேலும் மேம்படுத்தி 100 கிலோ என்ற இலக்கை அடைய அந்நிறுவனம் செயலாற்றி வருகிறது. சில புதிய தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், எதிர்பார்த்ததைவிட கூடுதலான எடை குறைப்புக்கான வாய்ப்புகளையும் சுஸுகி நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

சுஸுகியின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியா உருவாகி வரும் நிலையில், எதிர்கால மாருதி சுஸுகி கார்களிலும் இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர ரக கார்களில் எடை குறைப்பு நேரடியாக மைலேஜ் மற்றும் செயல்திறனில் மேம்படுத்த உதவும்.

மாருதி சுஸுகி கார்களின் பாதுகாப்பு குறித்த பழைய விவாதங்களுக்கு மத்தியில், "எடை குறைக்கிறோம்" என்ற செய்தி எல்லோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் , தற்போதைய திட்டத்தின் நோக்கம் வெறுமனே கார்களை எடை குறைப்பது மட்டுமில்லாமல், குறைந்த எடை, சிறந்த செயல்திறன் மற்றும் தேவையான பாதுகாப்பை ஒரே கட்டமைப்பில் கொண்டுவருவதுதான் அந்நிறுவனத்தின் இலக்காக தெரிகிறது.

Article Published On: Sunday, September 27, 2026, 9:28 [IST]
English summary
Suzuki cars 100 kg weight reduction safety maruti cars future
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out