சுஸுகி e-Sky சிறிய எலெக்ட்ரிக் கார்: இந்தியாவில் மாருதி பிராண்டில் வருமா?

ஜப்பானில் இ-ஸ்கை (e Sky) என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் காரை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் ஜப்பானில் வகைப்படுத்தப்பட்டுள்ள கெய் (Kei) என்ற மிகவும் சிறிய கார் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அளவில் சிறியதாக இருந்தாலும் போதுமான இடவசதியுடன் நகர்ப்புற பயன்பாட்டுக்கு மிகச் சிறந்த மாடலாக இருக்கும். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், இந்த கார் மாருதி பிராண்டில் களமிறக்கப்படுமா என்ற ஆவலுடன் இந்திய ஊடகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

புதிய சுஸுகி இ ஸ்கை கார் மாடலானது 3,395மிமீ நீளமும், 1,475 மிமீ அகலமும், 1,625 மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 2,460 மிமீ வீல்பேஸ் நீளமும் உடையதாக இருக்கிறது. இந்த கார் 1,030 கிலோ எடையும், 4.4 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, அதிக போக்குவரத்து நெரிசலும், குறுகிய சாலைகளும் உடைய நகர்ப்புறங்களுக்கு ஏற்ற வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Suzuki E SKY

இந்த கார் டால்பாய் டிசைன் என்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு இருப்பதால் சிறிய காராக இருந்தாலும் உட்புறத்தில் 4 பேர் செல்வதற்கும், கூரையில் தலை இடிக்காமல் அமர்ந்து செல்வதற்கும் போதுமான இடவசதியை அளிக்கும்.

Also Read

இந்த காரில் இடம்பெறும் பேட்டரி உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப தகவல்கள் குறித்து சுஸுகி நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 310 கிமீ ரேஞ்ச் வரை செல்லும் திறன் படைத்ததாக மட்டும் தெரிவிக்கப்படுகிறது.

Suzuki E SKY

மேலும், இந்த காரின் பேட்டரியை பயன்படுத்தி வீட்டு மின் சாதனங்களை இயக்குவதற்கான வெஹிக்கிள் டு லோடு என்ற வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. லேப்டாப் சார்ஜ் செய்வது, கேம்பிங் செய்யும்போது சிறிய மின் அடுப்புகளை இயக்குவதற்கும், வீட்டில் மின்தடை ஏற்படும் சமயங்களிலும் இது உதவிகரமாக இருக்கும்.

Also Read

இந்த காரில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் உள்ளது. இதிலுள்ள நேவிகேஷன் வசதி மூலமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் பேட்டரியில் இருக்கும் சார்ஜை கணக்கிட்டு சரியான வழியில் வீட்டிற்கு அல்லது அருகிலுள்ள சார்ஜிங் ஸ்டேஷனுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

Suzuki E SKY

ஜப்பானில் ஏற்கனவே இந்த கெய் கார் பிரிவில் எலெக்ட்ரிக் மாடல்கள் உள்ளன. சீனாவின் பிஒய்டி கூட விரைவில் அங்கு சிறிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 2027ம் ஆண்டு இந்த கார் ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. தற்போது இந்தியாவிலும் எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிக வரவேற்பு எழுந்துள்ள நிலையில், இந்த இ ஸ்கை எலெக்ட்ரிக் கார் மாருதி பிராண்டில் அறிமுகம் செய்யப்படுமா என்ற ஆவல் எழுந்துள்ளது.

எம்ஜி காமட், டாடா டியாகோ உள்ளிட்ட சிறிய வகை எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்த புதிய மாடல் நேரடி போட்டியாக இருக்கும். இந்த கார் நடைமுறையில் 220 முதல் 250 கிமீ தூரத்திற்கான பயண வாய்ப்பை வழங்கும் என்பதுடன் நான்கு பேர் செல்வதற்கு வாய்ப்பை வழங்கும் என்பதால் தினசரி பயன்பாட்டிற்கு சிறப்பானதாக கருதப்படுகிறது.

Article Published On: Wednesday, August 26, 2026, 10:44 [IST]
English summary
Suzuki e sky electric car revealed japan possibilities for india
மேலும்... #suzuki #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X