8 பேர் வரை பயணம் செய்யலாம்.. மாருதி சுஸூகியின் புதிய வெளியீடு!

ஒவ்வொரு நாட்டின் ஆட்டோமொபைல் சந்தையும் ஒவ்வொரு விதமானது. அந்தந்த நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல ஆண்டுகளாக அந்த ஆட்டோமொபைல் சந்தைகள் மாறியிருக்கும். அந்த வகையில் ஜப்பானிய ஆட்டோமொபைல் சந்தையே மிகவும் பிராக்டிகலான ஒன்று எனக் கூறலாம். கார்களிலேயே பிராக்டிகாலிட்டியை அதிகம் புகுத்திய சந்தை ஜப்பானிய ஆட்டோமொபைல் சந்தையாகத் தான் இருக்கும்.

அங்கே விற்பனை செய்யப்படும் நிறைய கார்கள் கிட்டத்தட்ட மினி வேன் ரகத்தைச் சேர்தவையே. அதனை வெறும் பயணிகளின் பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், பல்வேறு தேவைகளுக்காகவும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கேற்பவே நிறுவனங்கள் அவற்றை வடிவமைத்திருக்கும். கார்களைக் கடந்து குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான கார் போலவே இருக்கும் மினிவேன்களும் ஜப்பானில் மிகவும் பிரபலம். இந்த வகையான வாகனங்களை ஜப்பானிய ஆட்டோமொபைல நிறுவனங்களே பிரதானமாக அங்கே தயாரிக்கின்றன.

Suzuki Landy

அந்த வகையில் ஜப்பானில் சுஸூகி நிறுவனம் தாங்கள் விற்பனை செய்து வரும் லேண்டி (Landy) என்ற மினிவேனை 2026ம் ஆண்டிற்காக அப்டேட் செய்துள்ளது. 2007ம் ஆண்டில் இருந்து மிகவும் பிரபலமான ஒரு வாகனமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது சுஸூகி லேண்டி. புதிய அப்டேட்டில் இந்த லேண்டி மினிவேனில் என்னென்ன மேம்பாடுகளை எல்லாம் சுஸூகி செய்திருக்கிறது, இந்த மாதிரியான ஒரு வாகனம் இந்தியாவில் வெளியிடப்பட்டால் வாடிக்கையாளர்களிடம் எடுபடுமா என்பதையெல்லாம் இங்கே பார்க்கலாம்.

உண்மையில் சுஸூகி நிறுவனம் மினிவேன்களை உருவாக்குவதில்லை. எனவே டொயோட்டாவிடமிருந்து கடன் வாங்கப்பட்ட ஒன்றாகவே இந்த லேண்டி இருக்கிறது. இந்தியாவில் மாருதியின் விலை குறைவான கார்களை ரீபேட்ஜ் செய்து எப்படி டொயோட்டா விற்பனை செய்கிறதோ, அதேபோலவே ஜப்பானில் டொயோட்டாவின் நோவா (Noah) என்ற மினிவேனை ரீபேட்ஜ் செய்தே லேண்டியாக சுஸூகி விற்பனை செய்து வருகிறது.

Suzuki Landy Minivan

நோவாவில் டொயோட்டா லோகோ இருக்கிறது என்றால், லேண்டியில் சுஸூகியின் லோகோ இருக்கிறது. அவ்வளவு தான் இரண்டு மினிவேன்களுக்கும் இடையிலான பிரதான வேறுபாடாக இருக்கிறது. மற்றவை எல்லாம் சின்னச் சின்ன மாற்றங்கள் தான். டிசைனை வைத்துப் பார்த்தால் இரண்டு வாகனங்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும்.

லேண்டி (அல்லத நோவா) மினிவேனின் முகப்புப் பக்கம் மொத்தமும் கிரில்லுக்காகவே ஒதுக்கப்பட்டதைப் போல டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. மேலிருந்து, கீழ் வரை படிப்படியாக கிரில் மட்டுமே டியர்களுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்த மினிவேனுக்கு ஃபேமிலி லுக்கைக் கொடுக்காமல், அக்ரஸிவ்வான லுக்கைக் கொடுக்கிறது. இது ஒரு மாஸ் மார்க்கெட் வாகனம் தான் என்றாலும், வெளியிலிருந்து பார்க்கும் போது சொகுசு காருக்கு உண்டான லுக்கைக் கொடுக்கிறது.

டிசைன் மற்றும் வசதிகளில் முந்தைய லேண்டியை விட புதிய வேன் சில மேம்பாடுகளைப் பெற்றிருக்கிறது. இத்துடன் பவர்ட்ரெயின் மற்றும் சீட்டிங் லேஅவுட்டும் மேம்பட்டிருக்கிறது. இதுவரை 7 சீட்டராக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த சுஸூகி மினிவேன் இனி 8 சீட்டராகவும் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இந்த லேண்டியின் சீட்களில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசை இருக்கைகளை மடித்துவிட்டு படுக்கை போலவே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தான்.

இதுவரை 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் லேண்டி கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த இன்ஜினின் பயன்பாட்டை சுஸூகி நிறுத்தியிருக்கிறது. இனி 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் + எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைபிரிட் பவர்ட்ரெயினுடன் மட்டுமே இந்த மினிவேன் விற்பனை செய்யப்படவிருக்கிறது. ஜப்பானிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மனதில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதில் கொடுக்கப்பட்டிரக்கும் ஹைபிரிட் பவர்ட்ரெயினானது 138 hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும் நிலையில், லிட்டருக்கு 23.2 லிட்டர் மைலேஜையும் கொடுக்கும் என சுஸூகி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்ககது. பிரதானமாக ஃப்ரண்ட் வீல் டிரைவ் வசதியையே இந்தக் மினிவேன் கொண்டிருந்தாலும், E-Four என்ற ஒரு வேரியன்டில் மட்டும் 4 வீல் டிரைவ் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஃப்ரண்ட் வீல் டிரைவ் வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட 2026 லேண்டி மினிவேனானது இந்திய மதிப்பிற்கு 23 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் ஜப்பானில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆல் வீல் டிரைவ் வசதி கொண்ட வேரின்டை இந்திய மதிப்பிற்கு 24.71 லட்சம் ரூபாய் விலையில் ஜப்பானில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஆண்டுக்கு 1,200 லேண்டி மினிவேன்களை விற்பனை செய்ய வேண்டும் என தற்போது இலக்கு நிர்ணயித்துள்ளது சுஸூகி.

இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் பிராக்டிகலான வாகனமாக இது இருக்கும். மினிவேன் என்று கூறினாலும் ஒரு 7 சீட்டர் காரின் அளவில் தான் இந்த சுஸூகி லேண்டியும் இருக்கிறது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் மஹிந்திரா 7XO-வின் அதே நீளத்தில் தான் லேண்டியும் இருக்கிறது. அகலத்தில் லேண்டியை விட 7XO 160 மிமீ அதிகம். உயரத்தில் லேண்டி 120 மிமீ வரை கூடுதலாக இருக்கிறது.

பார்ப்பதற்கு வேன் போன்ற டிசைனைக் கொண்டிருப்பதாலேயே இதனை மினிவேன் என்று அழைக்கின்றன. அளவைப் பொறுத்தவரை இது ஒரு கார் தான். எனவே இந்தியாவிற்கு மிகவும் பிராக்டிகலான வாகனமாக இது இருக்கும். ஆனால் 20 லட்சத்திற்கும் மேல் என்று சொல்லும் போதே ப்ரீமியமான அல்லது ஸ்டேட்டஸை விரும்பும் வாடிக்கையாளர்களையே மையப்படுத்துகிறது.

கார் என்பது எப்போதும் பயன்பாட்டிற்கான வாகனம் என்பதைக் கடந்து ஒரு ஸ்டேட்டஸ் சிம்பளாகவும் இந்தியவில் பார்க்கப்படுகிறது. அந்த மனநிலை இப்போது இன்னும் அதிகரித்தே இருக்கிறது. எனவே வேன் போன்ற தோற்றத்தில் இருக்கும் லேண்டியை, மிகவும் பிராக்டிகலான வாகனமாகவே இருந்தாலும் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்குவார்களா என்பது சந்தேகம் தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடும்பப் பயன்பாட்டிற்க ஏற்ற சிறப்பான வாகனமாக லேண்டி இருக்கிறது. அனைத்து வகைகளிலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற, ஆனால் இந்தியர்களின் மனநிலைக்கு ஏற்புடையதாக இல்லாத காராகவே லேண்டி இருக்கும். பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் பிராக்டிகாலிட்டியை முதன்மையாகப் பார்க்காத வரை இதுபோன்ற வாகனங்கள் இந்தியாவில் வரவேற்பைப் பெறுவது கடினம் தான். ஆனால் பிற்காலத்தில் கார்களும் அவசியத் தேவையாக மாறும் போது இது போன்ற வாகனங்களுக்கும் இந்தியாவில் வரவேற்பு இருக்கும். ஆனால் அந்தக் காலம் இப்போது இல்லை.

Article Published On: Friday, June 5, 2026, 10:21 [IST]
English summary
Suzuki landy minivan 8 seater launched best car for family use
மேலும்... #suzuki #cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out