3 மடங்கு அதிக மைலேஜ்! ஹைட்ரஜனில் இயங்கும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அறிமுகம்! நடுக்கத்தில் போட்டி நிறுவனங்கள்!
இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles), ஹைப்ரிட் வாகனங்கள் (Hybrid Vehicles) மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் (CNG Vehicles) பிரபலமாக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத மாற்று எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிப்பதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) தீவிரமாக உள்ளார். எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், இந்தியாவில் எத்தனாலை (Ethanol) எரிபொருளாக பயன்படுத்துவதிலும் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் உடன் 85 சதவீத எத்தனாலை கலந்து (15 சதவீதம் பெட்ரோல் + 85 சதவீதம் எத்தனால்) வாகனங்களில் பயன்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. E85 என அழைக்கப்படும் இந்த எரிபொருள் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வரும் கச்சா எண்ணெய்யின் (Crude Oil) அளவு குறையும்.
இது இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் நன்மைகளை ஏற்படுத்தும். அத்துடன் விவசாய பொருட்களில் இருந்துதான் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எனவே இந்திய விவசாயிகளுக்கும் இது பயனளிப்பதாக அமையும். அத்துடன் எத்தனால் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. இது போன்ற காரணங்களால்தான் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி கொண்டுள்ளது.

இவற்றுடன் ஹைட்ரஜனை (Hydrogen) எரிபொருளாக பயன்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை எரிபொருள்தான். இந்தியாவில் தற்போது ஹைட்ரஜன் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கி விட்டன. கொச்சி சர்வதேச விமான நிலையம் (Cochin International Airport) இதற்கு ஒரு உதாரணம்.
கேரளம் (Keralam) மாநிலத்தில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் இணைந்து ஹைட்ரஜன் ஸ்டேஷன் (Hydrogen Station) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொச்சி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஹைட்ரஜன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் ஹைட்ரஜன் மூலம் இயங்க கூடிய சுஸுகி ஸ்விஃப்ட் (Suzuki Swift) கார் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சுஸுகி ஸ்விஃப்ட் கார், இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும்.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் என்ற பெயரில் இந்த கார் விற்பனையாகி கொண்டுள்ளது. சர்வதேச சந்தைகளை பொறுத்து, நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், டர்போ பெட்ரோல், டீசல், மைல்டு ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி என பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களை, சுஸுகி ஸ்விஃப்ட் கார் பெற்றுள்ளது. இந்த வரிசையில் ஹைட்ரஜன் இன்ஜின் பொருத்தப்பட்ட சுஸுகி ஸ்விஃப்ட் கார் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஹைட்ரஜன் இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள், ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்களை பயன்படுத்துகின்றன. காரின் எரிபொருள் டேங்க்கில் சேமிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜனை இவை மின்சாரமாக மாற்றுகின்றன. இந்த மின்சாரம், பேட்டரி தொகுப்பில் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் மோட்டார்கள் இயக்கப்பட்டு, கார் முன்னோக்கி செல்கிறது.
பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து புகை வெளியாவதை போல், ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகனங்களில் நீர் வெளியாகும். எனவே இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அத்துடன் ஹைட்ரஜன் வாகனங்கள் மைலேஜிலும் (Mileage) தலைசிறந்து விளங்குகின்றன. வழக்கமான ஐசி இன்ஜின் வாகனங்கள் உடன் ஒப்பிடும்போது, ஹைட்ரஜன் வாகனங்கள் சுமார் 3 மடங்கு அதிக மைலேஜ் தரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவேதான் ஹைட்ரஜன் இன்ஜின் பொருத்தப்பட்ட சுஸுகி ஸ்விஃப்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 2026 வியன்னா மோட்டார் சிம்போஸியம் (2026 Vienna Motor Symposium) நிகழ்ச்சியில், சுஸுகி ஸ்விஃப்ட் ஹைட்ரஜன் காட்சிக்கு வைக்கப்பட்டது.
மொபிலிட்டி தொழில்நுட்ப நிறுவனமான ஏவிஎல் (AVL) மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து, ஹைட்ரஜன் இன்ஜின் மூலம் இயங்க கூடிய சுஸுகி ஸ்விஃப்ட் காரை காட்சிக்கு வைத்திருந்தன. இது குறித்து ரஸ்லேன் தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்பது போன்ற உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உலகில் பெட்ரோல், டீசல் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. எனவே ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பது கூடுதல் சிறப்பு.


Click it and Unblock the Notifications