இந்த தொழில் செய்து கொண்டிருந்தவர் எம்எல்ஏ-வா! ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரள வைத்த விஜய்!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (Tamil Nadu Election Results 2026) தற்போது வெளியாகி வருகின்றன. இதில், தவெக என சுருக்கமாக அழைக்கப்படும் தமிழக வெற்றிக் கழகம் (TVK - Tamilaga Vettri Kazhagam)தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நடிகர் விஜய் (Actor Vijay) தவெக-வை ஆரம்பித்து ஒரு சில வருடங்கள் மட்டுமே ஆகின்றன. இதுதான் தவெகவிற்கு முதல் தேர்தல். இருப்பினும் திமுக (DMK) மற்றும் அதிமுக (ADMK) என தமிழகத்தை கடந்த காலங்களில் ஆண்ட ஜாம்பவான்களை வீழ்த்தி, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்து நிற்கிறது.

Vijay Dhamu With Vijay

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi), காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi), ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் (Pawan Kalyan), நடிகர்கள் மகேஷ் பாபு (Mahesh Babu), ஜீவா(Jiiva) என பலரும் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்தில் தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள ஒரு சில வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதில், விஜய் தாமு (Vijay Dhamu) மிகவும் முக்கியமானவர் ஆவார். சென்னை ராயபுரம் (Chennai Royapuram) தொகுதியில் போட்டியிட்ட அவர் 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

Vijay

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் டாக்டர் சுபைர் கான் மற்றும் அதிமுகவின் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர். விஜய் தாமு 59,091 வாக்குகள் பெற்ற நிலையில், டாக்டர் சுபைர் கான் 44,842 வாக்குகளையும், ஜெயக்குமார் 18,420 வாக்குகளையும் மட்டுமே பெற்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விஜய் தாமுவை பற்றி இங்கே பேசி கொண்டிருக்க காரணம் உள்ளது. அடிப்படையில் அவர் ஒரு ஆட்டோ டிரைவர் (Auto Driver) ஆவார். மிகவும் எளிமையான பின்னணியை கொண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினராக மாறியிருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

தற்போது சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள விஜய் தாமுவிடம், 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார் ஒன்று உள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம்தான், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விஜய் தாமு வாங்கியுள்ளார். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார்களில் ஒன்றாகும்.

குறிப்பாக அரசியல் கட்சியினர் அதிகம் பயன்படுத்தும் கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இருக்கிறது. விஜய் தாமு வைத்துள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7 சீட்டர் கார் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதுதவிர ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்கள் (Honda Two-wheelers) இரண்டையும் விஜய் தாமு வைத்துள்ளார். அவை இரண்டுமே ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர்கள்தான். இது இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விஜய் தாமுவின் வாகனங்களை பற்றிய தகவல்கள், அவர் வேட்புமனு தாக்கலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மிகவும் எளிமையான பின்னணியை கொண்ட விஜய் தாமு போன்ற நபர்கள் அதிகாரத்திற்கு வருவது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்தான் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Monday, May 4, 2026, 20:58 [IST]
English summary
Tamil nadu election results auto driver to mla tvk vijay dhamu cars and two wheelers details
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+