விஜய் வீட்டிற்கு த்ரிஷா வந்த 3 கோடி ரூபா கார் யார் பெயரில் இருக்கு தெரியுமா? மேட்டர் வைரல் ஆயிட்டு இருக்கு!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (2026 Tamil Nadu Assembly Election Results), இன்று (மே 4) வெளியாகி வருகின்றன. இதில், பெரும்பாலான கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, தவெக என சுருக்கமாக அழைக்கப்படும் தமிழக வெற்றிக் கழகம் (TVK - Tamilaga Vettri Kazhagam) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருகிறது.

இந்த செய்தி எழுதப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் தவெக 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து கொண்டிருந்தது. தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு 118 எம்எல்ஏக்கள் (MLA's) ஆதரவு தேவை. இந்த மேஜிக் எண்களை (Magic Numbers) தவெக நெருங்கி வருகிறது. இறுதி முடிவு எப்படியாக இருப்பினும் தற்போதைய நிலையில் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்து கொண்டுள்ளது.

Trisha s Range Rover

எனவே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு (TVK President Vijay) வாழ்த்துக்கள் வர தொடங்கியுள்ளன. அத்துடன் சென்னை நீலாங்கரை (Chennai Neelankarai) பகுதியில் அமைந்துள்ள விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் விஜய் வீட்டிற்கு வர தொடங்கியுள்ளனர்.

அத்துடன் நடிகை த்ரிஷாவும் (Trisha) விஜய் வீட்டிற்கு வந்துள்ளார். நடிகை த்ரிஷாவிற்கு இன்று பிறந்த நாள் (Birthday) ஆகும். எனவே திருப்பதியில் (Tirupati) இன்று காலை அவர் சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜய்யின் வீட்டிற்கு த்ரிஷா வந்தார்.

Vijay

அவர் வந்தது வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஆகும். TN 07 DT 0003 என்ற பதிவு எண் கொண்ட வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் காரில் நடிகை த்ரிஷா, விஜய் வீட்டிற்கு வந்தார். இந்த காரின் பதிவு எண்ணை வைத்து பாலிசி பஜார் தளத்தில் தேடியதில், அது நடிகை த்ரிஷாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதிதான் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இது புத்தம் புதிய கார் ஆகும். இது ரேஞ்ச் ரோவர் காரின் வோக் (Vogue) வேரியண்ட் ஆகும். அத்துடன் இது லாங் வீல் பேஸ் (LWB - Long Wheel Base) மாடல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

லாங் வீல் பேஸ் வெர்ஷன் மாடல்களின் உள்ளே கேபின் இடவசதி தாராளமாக இருக்கும். எனவே பயணிகள் சொகுசாகவும், சௌகரியமாகவும் பயணம் செய்ய முடியும். விஜய் வீட்டிற்கு நடிகை த்ரிஷா வந்த காரில் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் சென்னை ஆன்-ரோடு விலை (Chennai On-road Price) சுமார் 3 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ரேஞ்ச் ரோவர் போன்ற கார்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை செய்வார்கள். இந்த வகையில் நடிகை த்ரிஷாவும் பல்வேறு மாற்றங்களை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த காரின் விலையை துல்லியமாக கூறுவது சற்று கடினம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகை த்ரிஷா சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர் ஆவார். எனவே மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class), மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) மற்றும் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series) போன்ற கார்களும் நடிகை த்ரிஷாவிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Article Published On: Monday, May 4, 2026, 16:23 [IST]
English summary
Tamil nadu election results tvk vijay trisha range rover video details
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+