மு.க. ஸ்டாலினை கதற விட்ட தவெக வேட்பாளர் பாபுவை பற்றி வெளிவந்த உண்மை... தமிழ்நாடே மெரண்டு போயிருச்சு...

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான (Tamil Nadu Assembly Election) வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று (மே 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் (Results) அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் விஜய்யின் (Vijay) தவெக (TVK) முன்னிலை (Leading) பெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி கொண்டுள்ளது.

குறிப்பாக சென்னை கொளத்தூர் (Chennai Kolathur) தொகுதியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை (Tamil Nadu Chief Minister M.K. Stalin), தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு (V.S. Babu) பின்னுக்கு தள்ளியிருப்பது, தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த செய்தி எழுதப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 12,916 வாக்குகள் பெற்று 2,277 வாக்குகள் முன்னிலை வகித்து கொண்டிருந்தார்.

V S Babu With Vijay

இது ஆரம்ப கட்ட நிலவரம் மட்டுமே. இறுதி முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். இருப்பினும் திமுக (DMK) தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் என பெரிய பொறுப்புகளை வகித்து கொண்டுள்ள மு.க.ஸ்டாலினை வி.எஸ். பாபு பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

எனவே இந்த நேரத்தில் அவரை பற்றிய தகவல்களை பலரும் தேட தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் வி.எஸ். பாபுவை பற்றி தெரிய வந்துள்ள தகவல் ஒன்று பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வி.எஸ். பாபுவிடம் சொந்தமாக வாகனங்கள் எதுவுமே இல்லை என்பதுதான் அந்த ஆச்சரியமான தகவல் ஆகும்.

MK Stalin

வேட்புமனு தாக்கலின்போது அளித்த பிரமாண பத்திரத்தில் தன்னிடம் மோட்டார் வாகனங்கள், வானூர்திகள், படகுகள் மற்றும் கப்பல்கள் என எந்த வாகனங்களும் இல்லை என வி.எஸ். பாபு குறிப்பிட்டுள்ளார். அவரிடம் மட்டுமல்லாது, அவரது துணைவி மற்றும் சார்ந்தவர்கள் என யாரிடமும் வாகனங்கள் எதுவும் இல்லை என வி.எஸ். பாபுவின் வேட்புமனு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வாக்காளர்கள் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். தவெக தலைவர் விஜய் கூட பல கோடி ரூபாய் சொத்து மதிப்பை காட்டியுள்ளார். ஆனால் அவரது கட்சியை சேர்ந்த வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லாதது தமிழக வாக்காளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்டேட்: காலையில் வி.எஸ் பாபு முன்னிலையில் இருந்த நிலையில், கொளத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவில், அவர் வெற்றி பெற்றுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை அவர் தேர்தலில் வீழ்த்தியிருப்பது, திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது 2026 சட்டமன்ற தேர்தலின் மிகவும் அதிர்ச்சிகரமான தோல்விகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 5 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதி மக்கள் தற்போது சட்டமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்பை கூட வழங்கவில்லை. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை போல், திமுக அரசின் முக்கிய அமைச்சர்கள் பலரும், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியை தழுவியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Article Corrections

அப்டேட் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில், கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைந்த தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Article Published On: Monday, May 4, 2026, 10:32 [IST]
English summary
Tamil nadu election results tvk vs babu cars vehicles mk stalin kolathur
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out