இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் விபத்து அதிகம்! 2025ல் இத்தனை விபத்து நடந்துடுச்சா?
தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தினம் தோறும் விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் எண்ணிக்கையை குறித்த விபரங்களை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு தான் இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் தமிழ்நாட்டில் நடந்ததாக தகவல்கள் வெளியாகி இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல மக்கள் பல தேசிய நெடுஞ்சாலை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை குறைக்கவும் அதனால் ஏற்படும் மரணங்களை குறைக்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

2025ம் ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த வாகன விபத்துக்கள் குறித்த விபரங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. மொத்தம் 2122 விபத்துக்கள் தேசிய நெடுஞ்சாலைகள் நிகழ்ந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்னதான் அதிக விபத்து நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும் விபத்தில் மரணம் அடையும் நபர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லை மாறாக உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக விபத்து மரணங்கள் நடப்பதாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசத்தில் விபத்து எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இதன் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது.

2020ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 292 தேசிய நெடுஞ்சாலை விபத்துக்கள் நடந்துள்ளது இதில் 6,156 பேர் உயிருள்ள உயிரிழந்துள்ளனர் ஆனால் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகத்தை விட அதிக எண்ணிக்கையிலான நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் வாகன விபத்து நடக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு நீங்கள் வாகனம் ஓட்டும்போது நீங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமாக இருக்கிறது அதே நேரம் விபத்து உத்தர பிரதேச மாநிலத்தில் நீங்கள் பயணிக்கும் போது உங்கள் வாகனம் விபத்துக்கினால் உங்கள் உயிரிழப்புக்கான அபாயம் அதிகமாக இருக்கிறது. இதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பான எமர்ஜென்சி மெடிக்கல் ரெஸ்பான்சிஸ் சிஸ்டம் இருக்கிறது. அதே நேரம் விபத்து நடக்கும் போது சராசரி வேகமும் தமிழகத்தில் குறைவாக இருக்கிறது. இரண்டும் மாறாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்த விபத்துகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை நமக்கு கண்கூடாக காட்டுகிறது கடந்த 2024ம் ஆண்டு மொத்தம் 20,672 விபத்துக்கள் நடந்துள்ளன ஆனால் 2025,ம் ஆண்டு21,922 ஆக இது உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்தை கண்காணிப்பதற்கான சிஸ்டம் மற்றும் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதன் மூலம் நமக்கு விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிந்து அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் இவ்வளவு அதிகமான சாலை விபத்துக்கள் நடப்பதற்கு முக்கியமான காரணம் அதிக வேகம்தான். அதிக வேகத்தில் வாகனம் ஓட்டும்போதுதான் விபத்து அதிகம் நடக்கிறது. இதனால் காயங்கள் அதிகமாக நடக்கிறது. இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இதனால் நீங்கள் வாகனம் ஓட்டும்போது குறைவான வேகத்தில் வாகனம் ஓட்டினால் வாகனம் விபத்தில் சேக்குவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறையும்.


Click it and Unblock the Notifications









