விலையில் 'சம்பவம்' செய்த டாடா... ரூ.5.29 லட்சத்தில் புதிய ஏரிஸ் செடான் கார்... விக்கித்து நிற்கும் டிசையர்

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியிருந்த புதிய டாடா ஏரிஎஸ் செடான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அட்டகாசமான டிசைன் அம்சங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வந்துள்ள இந்த கார் மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட காம்பேக்ட் செடான் கார்களுடன் போட்டி போடும். இந்த காருக்கு ரூ.5.29 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டாடா ஏரிஸ் செடான் கார் வசதிகளை பொறுத்து Smart, Pure, Pure+, Creative மற்றும் Accomplished ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு எரிபொருள் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலின் ஆரம்ப அறிமுக விலை ரூ.5.29 லட்சமாகவும், சிஎன்ஜி மாடலின் ஆரம்ப விலை ரூ.6.29 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள டீலர்களுக்கு இந்த கார் ஏற்கனவே வந்துள்ளதால், ஓரிரு நாட்களில் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட உள்ளது.

Tata Aeris Launch

இந்த புதிய செடான் தனிநபர் பயன்பாட்டிற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதாக டாடா கூறியுள்ளது. வழக்கமாக ஒரே கார் தனிநபர் மற்றும் வாடகை கார் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும் நிலையில், ஏரிஸ் அதிலிருந்து வேறுபட்டு தனிநபர் பயன்பாட்டு சந்தையை மையமாக வைத்து வந்துள்ளது. டாக்சி மார்க்கெட்டிற்காக, எக்ஸ்பிரஸ்-டி பிராண்டை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என டாடா கார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஏரிஸ் வழக்கமான தோற்றத்தைக் கடந்து நவீன டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது. முகப்பில் அகலமான தோற்றம், எல்இடி முகப்பு விளக்குகள், பகல்நேர விளக்குகள், அகலமான கீழ்புற கிரில், டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. பின்புறத்தில் இன்ஃபினிட்டி கனெக்டட் எல்இடி டெயில் லைட்டுகள், கருப்பு கூரை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

Also Read

உட்புறத்திலும் பிரீமியம் உணர்வை வழங்கும் வகையில் பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காற்றோட்ட வசதியுடன் கூடிய செயற்கை லெதர் இருக்கைகள், இரட்டை திரை அமைப்பு, 26.03 செமீ தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.7 செமீ திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இடம்பெறுகின்றன. வயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் ஏசி வசதியும் வழங்கப்படுகிறது.

Tata Aeris Launch

பாதுகாப்பிலும் ஏரிஸ் காருக்கு டாடா கார்ஸ் நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஆறு ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் வழங்கப்படுகின்றன. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் ஐஎஸ்ஓஃபிக்ஸ் குழந்தை இருக்கை பொருத்தும் வசதியும் உள்ளன. மேலும், பிளைண்ட் வியூ மானிட்டர் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.

Also Read

இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடலிலும் மேனுவல் மற்றும் ஏஎம்டி தேர்வுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் இரண்டு சிஎன்ஜி சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஏரிஸ் காரில் 419 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. பின்புற ஏசி வென்ட்டுகள், 65W திறன் கொண்ட டைப்-சி அதிவேக சார்ஜிங் வசதி, கனெக்டெட் கார் தொழில்நுட்பங்கள் மற்றும் 35க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட வசதிகளைக் கொண்ட டாடாவின் ஐஆர்ஏ அமைப்பும் இடம்பெற்றுள்ளன. இதனால் தினசரி நகரப் பயணம் மட்டுமின்றி நீண்ட தூர பயணங்களுக்கும் வசதியான செடானாக ஏரிஸை நிலைநிறுத்த டாடா முயற்சித்துள்ளது.

பெட்ரோல் மேனுவல் மாடலின் விலை ரூ.5.29 லட்சத்தில் தொடங்கி ரூ.8.19 லட்சம் வரை செல்கிறது. பெட்ரோல் ஏஎம்டி மாடல்கள் ரூ.6.69 லட்சம் முதல் ரூ.8.74 லட்சம் வரை உள்ளன. சிஎன்ஜி மேனுவல் மாடல்கள் ரூ.6.29 லட்சம் முதல் ரூ.9.19 லட்சம் வரையிலும், சிஎன்ஜி ஏஎம்டி மாடல்கள் ரூ.7.69 லட்சம் முதல் ரூ.9.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

டாடா ஏரிஸ் காரின் போட்டியாளர்களான ஹூண்டாய் ஆரா கார் ரூ.5.99 லட்சத்திலும், மாருதி டிசையர் கார் ரூ.6.30 லட்சத்திலும், ஹோண்டா அமேஸ் கார் ரூ.7.65 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஹூணடாய் ஆரா காரைவிட ரூ.70,000 வரையிலும், டிசையர் காரைவிட ரூ.1 லட்சம் வரையிலும், அமேஸ் காரைவிட ரூ.2.36 லட்சம் குறைவான ஆரம்ப விலையில் இந்த கார் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Article Corrections

This article has been updated with event images and more information.
Article Published On: Friday, September 25, 2026, 15:38 [IST]
English summary
Tata aeris sedan car launched india price specs features
மேலும்... #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out