ரூ.11,000 EMI-ல் புதிய டாடா ஏரிஸ் கார் வாங்கலாம்... சென்னையில் ஆன்ரோடு விலை மற்றும் EMI விபரம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக ஏரிஸ் என்ற காம்பேக்ட் செடான் காரை சில தினங்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஏற்கனவே இருந்த டிகோர் செடானுக்கு மாற்றாக வந்துள்ள இந்த புதிய கார், தனிப்பட்ட பயன்பாட்டுக்காக மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு எரிபொருள் தேர்வுகளிலும், மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் வாய்ப்புகளிலும் கிடைக்கிறது. இந்த புதிய கார் ரூ.5.29 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது. வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் டெலிவரி பணிகள் துவங்கப்பட உள்ளன.

இந்த கார் Smart, Pure, Pure+, Creative மற்றும் Accomplished என ஐந்து வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் விலை குறைவான ஸ்மார்ட் வேரியண்ட்டானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற உயர்நிலை வேரியண்ட்டுகளில் மேனுவல் மற்றும் AMT தேர்வுகள் கிடைக்கின்றன. CNG மாடலிலும் மேனுவல் மற்றும் AMT தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.29 லட்சம் முதல் ரூ.9.75 லட்சம் வரை உள்ளது.

Tata Aeris

இந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பதிவுக் கட்டணம், காப்பீடு உள்ளிட்ட கட்டணங்கள் சேர்க்கப்பட்ட பிறகு ஏரிஸ் காரின் சென்னை நகரில் ஆன்ரோடு விலை ரூ.6.60 லட்சம் முதல் ரூ.11.80 லட்சம் வரை வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஏரிஸ் காரின் ஒவ்வொரு வேரியண்ட்டிற்குமான ஆன்ரோடு விலையையும், கடன் திட்டத்தின் கீழ் அவற்றிற்கு செலுத்த வேண்டிய மாதத் தவணையையும் கணக்கிட்டு வழங்கியுள்ளோம். ஆன்-ரோடு விலையில் 20 சதவீதத்தை முன்பணமாக செலுத்தி, மீதமுள்ள 80 சதவீதத்திற்கு 9% வட்டி வீதத்தில் 60 மாதங்கள், அதாவது 5 ஆண்டுகளுக்கு கார் கடன் பெறுவதாக எடுத்துக்கொள்ளப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

வேரியன்ட் எக்ஸ்ஷோரூம் பதிவு கட்டணம் காப்பீடு B2B கட்டணம் TCS அத்தியாவசிய ஆக்சஸெரீஸ் ஆன்ரோடு விலை
Smart Petrol MT ₹5,29,990 ₹76,799 ₹30,016 ₹3,433 ₹0 ₹20,000 ₹6,60,238
Pure Petrol MT ₹6,14,990 ₹87,849 ₹32,452 ₹3,934 ₹0 ₹20,000 ₹7,59,225
Pure+ Petrol MT ₹6,74,990 ₹95,649 ₹34,171 ₹4,288 ₹0 ₹20,000 ₹8,29,098
Creative Petrol MT ₹7,49,990 ₹1,05,399 ₹36,321 ₹4,729 ₹0 ₹20,000 ₹9,16,439
Accomplished Petrol MT ₹8,19,990 ₹1,14,499 ₹38,328 ₹5,141 ₹0 ₹20,000 ₹9,97,958
Pure Petrol AMT ₹6,69,990 ₹94,999 ₹34,028 ₹4,258 ₹0 ₹20,000 ₹8,23,275
Pure+ Petrol AMT ₹7,29,990 ₹1,02,799 ₹35,748 ₹4,611 ₹0 ₹20,000 ₹8,93,148
Creative Petrol AMT ₹8,04,990 ₹1,12,549 ₹37,898 ₹5,053 ₹0 ₹20,000 ₹9,80,490
Accomplished Petrol AMT ₹8,74,990 ₹1,21,649 ₹39,904 ₹5,466 ₹0 ₹20,000 ₹10,62,009
Smart iCNG MT ₹6,29,990 ₹89,799 ₹33,963 ₹4,022 ₹0 ₹20,000 ₹7,77,774
Pure iCNG MT ₹7,14,990 ₹1,00,849 ₹36,517 ₹4,523 ₹0 ₹20,000 ₹8,76,879
Pure+ iCNG MT ₹7,74,990 ₹1,08,649 ₹38,320 ₹4,877 ₹0 ₹20,000 ₹9,46,836
Creative iCNG MT ₹8,49,990 ₹1,18,399 ₹40,573 ₹5,318 ₹0 ₹20,000 ₹10,34,280
Accomplished iCNG MT ₹9,19,990 ₹1,27,499 ₹42,676 ₹5,730 ₹0 ₹20,000 ₹11,15,895
Pure iCNG AMT ₹7,69,990 ₹1,07,999 ₹38,169 ₹4,847 ₹0 ₹20,000 ₹9,41,005
Pure+ iCNG AMT ₹8,29,990 ₹1,15,799 ₹39,972 ₹5,200 ₹0 ₹20,000 ₹10,10,961
Creative iCNG AMT ₹9,04,990 ₹1,25,549 ₹42,225 ₹5,642 ₹0 ₹20,000 ₹10,98,406
Accomplished iCNG AMT ₹9,74,990 ₹1,34,649 ₹44,328 ₹6,055 ₹0 ₹20,000 ₹11,80,022

இதன்படி ஸ்மார்ட் வேரியண்ட்டின் பெட்ரோல் மேனுவல் மாடலுக்கு ரூ.6.60 லட்சம் ஆன்ரோடு விலை வருகிறது. இதில் 20 சதவீத முன்பணமாக ரூ.1.32 லட்சம் செலுத்த வேண்டி இருக்கும். மீதமுள்ள ரூ.5.28 லட்சம் கடன் தொகைக்கு 9% ஆண்டு வட்டியில் 60 மாதங்கள் கடன் பெற்றால், மாத EMI ரூ.10,964 ஆக இருக்கும்.

அடுத்து, சிஎன்ஜி எரிபொருள் தேர்வை விரும்புபவர்களுக்கு Smart iCNG MT வேரியண்ட் ஆரம்ப நிலை தேர்வாக கிடைக்கிறது. சென்னையில் இந்த வேரியண்ட்டின் ஆன்ரோடு விலை ரூ.7,77,774 ஆக உள்ளது. இதில் 20 சதவீத முன்பணமாக சுமார் ரூ.1.56 லட்சம் செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.6.22 லட்சம் கடன் தொகைக்கு 9% ஆண்டு வட்டியில் 60 மாதங்கள் கடன் பெற்றால், மாத EMI ரூ.12,916 ஆக இருக்கும்.

Also Read

டாப் வேரியண்ட்

அனைத்து வசதிகளையும் கொண்ட Accomplished வேரியண்ட்டை தேர்வு செய்யும்போது, பெட்ரோல் MT மாடலுக்கு சென்னையில் ரூ.9.98 லட்சம் ஆன்ரோடு விலையும், பெட்ரோல் AMT மாடலுக்கு ரூ.10.62 லட்சம் ஆன்ரோடு விலையாக உள்ளது. இந்த மாடலுக்கு 20 சதவீத முன்பணத்துடன் வாங்கும்போது, இவற்றுக்கு முறையே ரூ.1.99 லட்சம் மற்றும் ரூ.2.12 லட்சம் முன்பணம் தேவைப்படும். 80 சதவீத கடன் தொகைக்கு 9% வட்டியில் 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், மாத EMI முறையே ரூ.16,573 மற்றும் ரூ.17,636 ஆக இருக்கும்.

இதேபோல், Accomplished iCNG MT மாடலின் ஆன்ரோடு விலை ரூ.11.16 லட்சமும், iCNG AMT மாடலின் விலை ரூ.11.80 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றுக்கு 20 சதவீத முன்பணமாக முறையே ரூ.2.23 லட்சம் மற்றும் ரூ.2.36 லட்சம் செலுத்த வேண்டும். மீதமுள்ள 80 சதவீத கடன் தொகைக்கு 9% வட்டியில் 60 மாதங்கள் கணக்கிட்டால், மாத EMI முறையே ரூ.18,531 மற்றும் ரூ.19,596 ஆக இருக்கும்.

வேரியண்ட் சென்னை ஆன்ரோடு விலை 20% முன்பணம் கடன் தொகை 5 ஆண்டு EMI @ 9%
Smart Petrol MT ₹6,60,238 ₹1,32,048 ₹5,28,190 ₹10,964
Pure Petrol MT ₹7,59,225 ₹1,51,845 ₹6,07,380 ₹12,608
Pure+ Petrol MT ₹8,29,098 ₹1,65,820 ₹6,63,278 ₹13,769
Creative Petrol MT ₹9,16,439 ₹1,83,288 ₹7,33,151 ₹15,219
Accomplished Petrol MT ₹9,97,958 ₹1,99,592 ₹7,98,366 ₹16,573
Pure Petrol AMT ₹8,23,275 ₹1,64,655 ₹6,58,620 ₹13,672
Pure+ Petrol AMT ₹8,93,148 ₹1,78,630 ₹7,14,518 ₹14,832
Creative Petrol AMT ₹9,80,490 ₹1,96,098 ₹7,84,392 ₹16,283
Accomplished Petrol AMT ₹10,62,009 ₹2,12,402 ₹8,49,607 ₹17,636
Smart iCNG MT ₹7,77,774 ₹1,55,555 ₹6,22,219 ₹12,916
Pure iCNG MT ₹8,76,879 ₹1,75,376 ₹7,01,503 ₹14,562
Pure+ iCNG MT ₹9,46,836 ₹1,89,367 ₹7,57,469 ₹15,724
Creative iCNG MT ₹10,34,280 ₹2,06,856 ₹8,27,424 ₹17,176
Accomplished iCNG MT ₹11,15,895 ₹2,23,179 ₹8,92,716 ₹18,531
Pure iCNG AMT ₹9,41,005 ₹1,88,201 ₹7,52,804 ₹15,627
Pure+ iCNG AMT ₹10,10,961 ₹2,02,192 ₹8,08,769 ₹16,789
Creative iCNG AMT ₹10,98,406 ₹2,19,681 ₹8,78,725 ₹18,241
Accomplished iCNG AMT ₹11,80,022 ₹2,36,004 ₹9,44,018 ₹19,596

புதிய டாடா ஏரிஸ் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடலிலும் இதே 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி தேர்வுகள் உள்ளன. iCNG மாடலில் சிஎன்ஜி எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

Also Read

அம்சங்களைப் பொறுத்தவரை ஏரிஸ் காரில் உயர் துல்லிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் Apple CarPlay மற்றும் Android Auto, வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. உயர்நிலை வேரியண்ட்டுகளில் காற்றோட்டமான லெதரெட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா மற்றும் டேஷ்கேம் ரெக்கார்டர் போன்ற வசதிகளும் கிடைக்கின்றன.

பாதுகாப்பிலும் ஏரிஸ் காருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. காரில் ஆறு ஏர்பேக்குகள், ESP உடன் கூடிய டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டயர் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுகின்றன. உயர்நிலை வேரியண்ட்டுகளில் 360 டிகிரி SVS HD கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர் போன்ற கூடுதல் வசதிகளும் வழங்கப்படுகின்றன.

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள சென்னை ஆன்ரோடு விலைகள் 26 செப்டம்பர் 2026 தேதியிட்ட டாடா டீலர் விலைப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலைப்பட்டியலில் பதிவு கட்டணம், காப்பீடு, B2B கட்டணம் மற்றும் ரூ.20,000 மதிப்புடைய அத்தியாவசிய ஆக்சஸெரீகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு ஆன்ரோடு விலை குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகப் பதிவு மற்றும் உறுதிமொழி பத்திரக் கட்டணம் கூடுதலாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விலை நகரம் மற்றும் டீலரை பொறுத்து மாறுபடலாம்.

Article Corrections

This article has been updated with another onroad price break up table.
Article Published On: Tuesday, September 29, 2026, 17:16 [IST]
English summary
Tata aeris sedan chennai on road price downpayment emi complete details
மேலும்... #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out