டிகோருக்கு குட்பை? பிரிமீயம் அம்சங்களுடன் வரும் புதிய டாடா செடான்... டிசையர், அமேஸ்க்கு செக்!

டாடா கார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் டிகோர் காம்பேக்ட் செடானுக்கு மாற்றாக புதிய மாடலை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காருக்கு ஏரிஸ் என பெயரிடப்படும் என்று கூறப்படுகிறது.

டிகோர் காரின் புதிய தலைமுறை மாற்றம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களுடன் இந்த பெயரும் வலுவாக இணைந்துள்ளது. டிகோர் பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பதிலாக, புதிய பெயரில் காரை அறிமுகப்படுத்துவதன் மூலம் காம்பேக்ட் செடான் பிரிவில் புதிய அடையாளத்தை உருவாக்க டாடா திட்டமிட்டு வருகிறது.

Tata Tigor

(Representational Image - Tata Tigor)

வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஏரிஸ் தற்போதைய டிகோர் அடிப்படை வடிவமைப்பை ஒத்திருக்கும். இருந்தாலும், பல்வேறு பிரிமீயம் அம்சங்களுடன் மாடர்ன் காராக இருக்கும். முன்பக்கத்தில் மெல்லிய அமைப்புடன் கிரில், கூர்மையான டிசைனில் ஹெட்லைட்டுகள், புதிய வடிவமைப்பில் பம்பர் மற்றும் புதிய வடிவிலான பனி விளக்குகள் இடம்பெறும் என தெரிகிறது. பக்கவாட்டில் நாட்ச்பேக் தோற்றமும், புதிய அலாய் வீல்களும் இடம்பெறும்.

Also Read

பின்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரலாம். குறிப்பாக, கனெக்டட் எல்இடி டெயில் லைட்டுகள், மாற்றியமைக்கப்பட்ட பம்பர் ஆகியவை காரின் தோற்றத்தை முற்றிலும் புதிய பொலிவுக்கு மாறும் எனத் தெரிகிறது. சமீபத்திய டாடா கார் மாடல்களில் காணப்படும் நவீன டிசைன் அம்சங்கள் ஏரிஸ் செடானிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.

கேபினிலும் டாடா முக்கியமான மாற்றங்களை செய்யலாம். சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட டியாகோவிலிருந்து சில டிசைன் அம்சங்களையும் தொழில்நுட்பங்களையும் ஏரிஸ் செடான் கார் பெறும் என தெரிகிறது. அத்துடன், 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அனலாக் திரை- டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Also Read

மேலும், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட் போன்ற வசதிகளும் கிடைக்கலாம். உயர்நிலை வேரியண்ட்களில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் அல்லது சன்ரூஃப் போன்ற கூடுதல் அம்சங்களை டாடா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மாடலில் ஆறு ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனுடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் இடம்பெறலாம்.

தற்போதைய டிகோர் மற்றும் டியாகோ கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் கிடைக்கலாம்.

சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் ஏரிஸ் வரும் வாய்ப்பு உள்ளது. இரண்டு சிஎன்ஜி எரிபொருள் கலன்கள் கொண்ட அமைப்புடன் இந்த கார் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎன்ஜி மாடலி எஞ்சின் 76 பிஎஸ் பவரையும், 97 என்எம் டார்க்கையும் வழங்கும் விதத்தில் இருக்கும். எதிர்காலத்தில் ஏரிஸ் அடிப்படையிலான எலெக்ட்ரிக் மாடலும் வருவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய டாடா ஏரிஸ் செடான் கார் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுக்கு இது போட்டியாக இருக்கும். ஆனால் பெயர், விலை, வேரியண்ட்டுகள் மற்றும் முழுமையான தொழில்நுட்ப விவரங்களை டாடா மோட்டார்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. வரும் 25ந் தேதி இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Via- Zigwheels

Article Published On: Sunday, September 20, 2026, 10:15 [IST]
English summary
Tata aeris sedan to replace tigor launch price features engine details
மேலும்... #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out