40 கிமீ மைலேஜ் கொடுககக்கூடிய புதிய டாடா கார் அறிமுகம்.. விலைய கேட்டா அசந்துருவீங்க

இந்தியாவில் CNG கார் பிரிவில் மாருதிக்கு இணையாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாக இருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் பல்வேறு CNG கார் மாடல்களில் ஆல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கும் ஒன்று. இதுவரை ஆல்ட்ராஸ் CNG மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே டாடா மோட்டார்ஸ் கொடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது ஆல்ட்ராஸ் CNG மாடலுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் டாடா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதுவரை ஆல்ட்ராஸ் CNG மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடனும் வாடிக்கையாளர்கள் இந்த CNG காரை வாங்கலாம். ப்யூர், ப்யூர் S, கிரியேட்டிவ், கிரியேட்டிவ் S மற்றும் அக்காம்ப்ளிஷ்டு S என ஐந்து வேரியன்ட்களாக ஆல்ட்ராஸ் CNG + ஆட்டோமேட்டிக் காம்போவை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

Tata Altroz CNG

ஆல்ட்ராஸ் CNG-யிலும் அதே 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினே பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜினானது CNG எரிபொருளில் இயங்கும் போது 73.5 hp பவர் மற்றும் 103 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதுவே பெட்ரோலில் இயங்கும் போது 88 hp பவர் மற்றும் 115 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய கார்களில ஒன்றாக ஆல்டராஸ் CNG இருந்து வருகிறது. தினசரி பயன்பாட்டின் போது நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் கிலோவுக்கு 25 கிமீ வரையிலான மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் கிலோவுக்கு 35 கிமீ முதல் 38 கிமீ வரையிலான மைலேஜையும் இந்தக் கார் கொடுப்பதாக நிறைய வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது மேனுவல் கியர்பாக்ஸிலேயே. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்னும் போது இன்னும் சற்று கூடுதல் மைலேஜைக் கூட எதிர்பார்க்கலாம்.

Tata Altroz

டாடாவின் மற்ற CNG கார்களைப் போலவே ஆல்ட்ராஸ் CNG ஆட்டோமேட்டிக் வெர்ஷனிலும் CNG எரிபொருளை சேமிக்க ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு கணிசமான அளவில் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. ஆல்ட்ராஸ் பெட்ரோல் மாடலானது 345 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கும் நிலையில், CNG மாடலானது 210 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸையே கொண்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஆல்ட்ராஸ் CNG ஆட்டோமேட்டிக் மாடலின் விலை விவரங்கள் பின்வருமாரு.
ப்யூர் - 8.70 லட்சம் ரூபாய்
ப்யூர் S - 9 லட்சம் ரூபாய்
கிரியேட்டிவ் - 9.57 லட்சம் ரூபாய்
கிரியேட்டிவ் S - 9.82 லட்சம் ரூபாய்
அக்காம்ப்ளிஷ்டு S - 10.77 லட்சம் ரூபாய்
(அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே)

டாப் எண்டுக்கு ஒருபடி கீழான அக்காம்ப்ளிஷ்டு S வேரியன்ட் வரை ஆல்ட்ராஸ் CNG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் கிடைப்பதால், LED விளக்குகள், சன்ரூஃப், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங் பேடு, ஆம்பியன்ட் லைட்டிங், 16 இன்ச அலாய் வீல்கள் ஆகிய மேம்பட்ட அம்சங்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: CNG எரிபொருள் வாகனங்களில் டாடாவின் முன்னெடுப்பு வரவேற்புக்குரியது. CNG எரிபொருளுடன் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு வசதிகளையும் டாடாவே முதலில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இரண்டு CNG ஹேட்ச்பேக் மாடல்களுமே டாடாவினுடையது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

CNG எரிபொருள் கார்களில் முதன் முதலில் ட்வின் சிலிண்டர் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தது டாடா மோட்டார்ஸ் தான். அதேபோல் CNG கார்களில் டார்போ பெட்ரோல் இன்ஜின், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எனப் பல்வேறு காம்பினேஷன்களையும் டாடா மோட்டார்ஸே முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.

Article Published On: Tuesday, May 12, 2026, 18:01 [IST]
English summary
Tata altroz cng with automatic gearbox launched in india
மேலும்... #tata motors #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+