இந்த டாடா காரை பற்றி தெரிஞ்சா ஒருத்தரும் மாருதி பக்கமும் போக மாட்டீங்க! சிஎன்ஜியில் எந்த காரை வாங்குவது?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி காரில் புதியதாக ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சிஎன்ஜி கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவது மிகவும் குறைவே. பல்வேறு விதமான உடலமைப்புகளில் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்யும் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து கூட எந்தவொரு ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி காரும் விற்பனை செய்யப்படுவது இல்லை.

அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி மேனுவல் காருக்கு விற்பனையில் போட்டியளிக்கும் வகையில் பலேனோ எஸ்-சிஎன்ஜி காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்கிறது. டாடா அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி மற்றும் மாருதி சுஸுகி பலேனோ எஸ்-சிஎன்ஜி கார்களுக்கு இடையே என்ஜின், தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவற்றில் என்னென்ன ஒற்றுமை & வேற்றுமைகள் உள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

tata altroz icng

என்ஜின்: அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி காரை காட்டிலும் அதிக இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக பலேனோ எஸ்-சிஎன்ஜியின் என்ஜின் சிஸ்டம் உள்ளது. ஆனால், டார்க் திறன் டாடா மாடலில் சற்று அதிகமாக கிடைக்கிறது. அதேபோல், பலேனோ எஸ்-சிஎன்ஜி காரில் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் என்கிற ஒரேயொரு கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

Specification Tata Altroz iCNG Maruti Suzuki Baleno S-CNG
Engine 1.2L Revotron iCNG 1.2L Dual Jet S-CNG
Max Power 73.5 PS @ 6000 rpm 77.5 PS @ 6000 rpm
Max Torque 103 Nm @ 3500 rpm 98.5 Nm @ 4300 rpm
Transmission 5-Speed MT / 5-Speed AMT 5-Speed Manual
Mileage (CNG) 27.8 km/kg 30.61 km/kg

ஆனால், அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி காரில் சமீபத்திய ஏஎம்டி கியர்பாக்ஸின் அறிமுகத்தால் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. ஆனால், மைலேஜ் விஷயத்தில் மற்ற மாருதி கார்களை போன்று 30கிமீ-க்கும் அதிகமான மைலேஜை பலேனோ எஸ்-சிஎன்ஜி கார் வழங்குகிறது. புதிய அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி ஏஎம்டி காரில் இன்னும் குறைவான மைலேஜையே பெற முடியும்.

maruti suzuki s-cng

பரிமாண அளவுகள்: நீளத்தில் இந்த இரு ஹேட்ச்பேக் வகை கார்களுக்கும் இடையே 1மிமீ கூட வித்தியாசம் இல்லை. ஆனால், முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது பலேனோ மாடலில் 2 செ.மீ அளவிற்கு அதிகமாக உள்ளது. பலேனோவை விட அகலத்தில் அல்ட்ராஸ் மாடல் 1 செ.மீ அகலமானதாகவும், உயரத்தில் 2 செ.மீ கூடுதல் உயரமானதாகவும் உள்ளது.

Dimension Tata Altroz iCNG Maruti Suzuki Baleno S-CNG
Length (mm) 3,990 3,990
Width (mm) 1,755 1,745
Height (mm) 1,523 1,500
Wheelbase (mm) 2,501 2,520
Ground Clearance (mm) 165 170
Boot Space (CNG) 210 Litres (Twin-Cylinder) Available (Cylinder Occupied)

தொழிற்நுட்ப வசதிகள்: டாடா அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி மற்றும் மாருதி சுஸுகி பலேனோ எஸ்-சிஎன்ஜி என்கிற இரு சிஎன்ஜி கார்களிலும் ஏகப்பட்ட மாடர்ன் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனால், இவை இரண்டுமே அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றவையாக உள்ளன. அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி காரில் கூடுதலாக குரல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய சன்ரூஃப் மற்றும் 5-ஸ்டார் குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீடு உள்ளது.

Key Features Tata Altroz iCNG Maruti Suzuki Baleno S-CNG
CNG Technology Twin Cylinder (Usable Boot) Single Cylinder
Airbags Dual Front Airbags Up to 6 Airbags (Zeta variant)
Infotainment 7-inch Touchscreen 7-inch SmartPlay Pro
Safety Rating 5-Star (Global NCAP) Not Rated (New Gen)
Special Feature Direct Start in CNG Best-in-Class Mileage

விலை: கூடுதல் மாடர்ன் வசதிகளுக்கு ஏற்ப பலேனோ எஸ்-சிஎன்ஜி காரை காட்டிலும் ரூ.10,000 அளவிற்கு கூடுதல் விலையில் அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு சிஎன்ஜி கார்களின் விலைகளும் ரூ.8.50 லட்சம்- ரூ.8.70 லட்சம் என்கிற அளவில் இருந்து துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் சிஎன்ஜி கார்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் ஒரு நல்ல மதிப்பை உருவாக்கியுள்ளதால், பலேனோ எஸ்-சிஎன்ஜி காரை தைரியமாக வாங்க முடிகிறது. மறுப்பக்கம், டாடா அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி கார் ஆனது இரு சிஎன்ஜி சிலிண்டர்கள் உடன் பின்பக்கத்தில் அதிக பூட் இடவசதியை வழங்குகிறது. அதேநேரம், அல்ட்ராஸின் 5-ஸ்டார் ரேட்டிங் மதிப்பீட்டையும் நம்மால் புறந்தள்ளிவிட முடியாது.

ஆதலால், நகர்புறத்திற்குள் ஓட்டுவதுடன், நெடுஞ்சாலைகளுக்கும் தைரியமாக கொண்டுச் செல்லக்கூடியதாக அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி கார் விளங்குகிறது. ஒட்டுமொத்தத்தில், மைலேஜ் மற்றும் மிகுந்த நம்பகத்தன்மையை எதிர்பார்ப்பவர்கள் பலேனோ எஸ்-சிஎன்ஜி பக்கமும், பாதுகாப்பு மற்றும் அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக்கூடிய தன்மையை எதிர்பார்ப்பார்கள் அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி கார் பக்கமும் செல்லலாம்.

Article Published On: Friday, May 15, 2026, 17:31 [IST]
English summary
Tata altroz icng vs maruti suzuki s cng check full car comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+