வெறும் 6 லட்சத்துக்கு எமனுக்கே சவால் விடும் கார்! டொயோட்டா, ஹூண்டாய்லாம் பாதுகாப்புல பக்கத்துல கூட வர முடியாது
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,135 டாடா அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 2,033 டாடா அல்ட்ராஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,102 டாடா அல்ட்ராஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனையில் 54 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் உடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது.
இந்த 3 கார்கள் உடன் ஒப்பிடும்போது, டாடா அல்ட்ராஸ் மிகவும் பாதுகாப்பான காராக கருதப்படுகிறது. குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் (Crash Tests) டாடா அல்ட்ராஸ் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5-Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் (India's Safest Hatchback) ரக காராக அல்ட்ராஸ் இருக்கிறது என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக டாடா அல்ட்ராஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி ஹெச்டி சர்ரவுண்ட் வியூ சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) டாடா அல்ட்ராஸ் கொண்டுள்ளது. எனவே பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க கூடிய வாடிக்கையாளர்கள், டாடா அல்ட்ராஸ் காரை தேர்வு செய்யலாம்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.30 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்து வருகிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா அல்ட்ராஸ் காரில் பாதுகாப்பு வசதிகள் மட்டுமல்லாது, ஏராளமான அதிநவீன சொகுசு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அல்ட்ரா வியூ 26.03 செமீ ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 26.03 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளை எல்லாம் டாடா அல்ட்ராஸ் கொண்டுள்ளது.
அத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல், ஏர் ப்யூரிஃபையர், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 ட்வீட்டர்கள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற வசதிகளும், டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது பாதுகாப்பு மற்றும் பிரீமியம் என இரண்டும் கலந்த கலவையாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








