இனி Tata.cars... டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவுக்குப் புதிய பெயர்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், தனது பயணிகள் வாகனப் பிரிவுக்கு (Passenger Vehicles) 'Tata.cars' என்ற புதிய பிராண்ட் அடையாளத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம், ஷோரூம்கள் முதல் டிஜிட்டல் தளங்கள் வரை அனைத்திலும் இனி பிரதிபலிக்கும்.

நீண்ட காலமாகவே இந்திய மக்கள் டாடாவின் கார்களை பொதுவாக "டாடா கார்" என்று இயல்பாக அழைத்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் இந்த நெருக்கமான உணர்வையே தற்போது தனது முதன்மை பிராண்ட் அடையாளமாக மாற்றுவதற்கு டாடா மோட்டார்ஸ் முனைந்துள்ளது . இனி எலக்ட்ரிக் வாகனங்கள் (EV), பெட்ரோல், டீசல், சிஎன்ஜி (ICE) என அனைத்து வாகனங்களும் ஒரே குடையின் கீழ் இந்த புதிய அடையாளத்துடன் இயங்கும். அதேநேரத்தில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான 'Tata.ev' அடையாளம் தொடர்ந்து துணை பிராண்டாக தொடர்ந்து செயல்படும்.

புதிய பிராண்ட் மாற்றத்துடன் 'Nothing's Too Far' என்ற புதிய பிராண்டு முழக்கத்தையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த பிராண்டுக்கு என்ற ஆம்பிஷன் புளூ என்ற புதிய நீல நிறம், பிரத்யேக எழுத்து வடிவம் மற்றும் புதிய ஒலி அடையாளம் ஆகியவற்றையும் டாடா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர் அனுபவத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த புதிய அடையாளம், இனி வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள டாடா ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களில் படிப்படியாக புதுப்பிக்கப்படும்.

Also Read

இருப்பினும், கார் உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ பெயர் மாற்றப்படவில்லை. அரசாங்க ஆவணங்கள், அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் மற்றும் நிதி தொடர்பான தகவல்களுக்கு Tata Motors Passenger Vehicles Ltd என்ற பெயரே தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். மேலும், கார்களில் உள்ள வழக்கமான டாடா லோகோ மற்றும் தனிப்பட்ட கார் மாடல்களின் பெயர்களில் எந்த மாற்றமும் இருக்காது.

Also Read

கார் வாங்கும் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் விதத்தில், அனைத்து வகை பயண அமைப்புகளையும் ஒரே டிஜிட்டல் மற்றும் ரீடெய்ல் அனுபவத்தில் கொண்டுவரவுமே இந்த பிராண்டிங் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தையில் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொள்ளவும், எதிர்கால மின்சார மற்றும் தொழில்நுட்ப சார் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்க்கவும் இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Thursday, August 27, 2026, 23:04 [IST]
English summary
Tata cars new brand identity passenger vehicles nothings too far
மேலும்... #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out