மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்த டாடா... இன்னும் என்னலாம் நடக்க போகுதோ...
இந்தியாவில் பொதுவாக காலண்டர் ஆண்டின் தொடக்கத்திலும் (ஜனவரி 1), நிதியாண்டின் தொடக்கத்திலும் (ஏப்ரல் 1) கார்களின் விலை உயர்த்தப்படுவது வழக்கம். தற்போது 2025-26ம் நிதியாண்டு, அதன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அதற்கு அடுத்த 2026-27ம் நிதியாண்டு, வரும் ஏப்ரல் 1ம் தேதி பிறக்கவுள்ளது.
எனவே கார் நிறுவனங்கள் விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. இதன்படி மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் ஆடி (Audi) போன்ற நிறுவனங்களின் கார்கள் விலை, வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, 2 சதவீதம் வரை உயரவுள்ளது.

இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் தற்போது விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களின் விலை மட்டும் உயரவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதாவது பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மற்றும் சிஎன்ஜி (CNG) கார்களின் விலை மட்டும் உயரவுள்ளது.
ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பற்றிய அறிவிப்பு எதையும் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்களின் விலை சராசரியாக சுமார் 0.5 சதவீதம் வரை உயரவுள்ளது. இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த விலை உயர்வானது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐசி இன்ஜின் கார்கள் மற்றும் அதன் வேரியண்ட்களை பொறுத்து மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே துல்லியமான தகவல்களுக்கு, உங்களுக்கு அருகில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகுவது சிறந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9 ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை டாடா டியாகோ (Tata Tiago), டாடா டிகோர் (Tata Tigor), டாடா பன்ச் (Tata Punch), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா கர்வ் (Tata Curvv), டாடா சியரா (Tata Sierra), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகியவை ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஐசி இன்ஜின் கார்கள் தவிர, பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற வர்த்தக வாகனங்களின் விலையையும், வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து உயர்த்தவுள்ளது. டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்களின் (Commercial Vehicles) விலை 1.5 சதவீதம் வரை உயரவுள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது சிறிய அளவிலான விலை உயர்வு மட்டுமே என்பதால், இதன் காரணமாக விற்பனையில் பாதிப்புகள் ஏற்படாது என நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து இன்னும் பல்வேறு கார் நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என நாம் எதிர்பார்க்கலாம். எனவே புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் முடிந்த வரை முன்னதாகவே 'புக்கிங்' செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் விலை உயர்வை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








